பும்ரா
பும்ராமுகநூல்

சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா பும்ரா?...பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக, வரும் 20ஆம் தேதி விளையாட உள்ளது.
Published on

சாம்பியன்ஸ் டிராபியில் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளது பிசிசிஐ.

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அந்த அணியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் வருகிற 11-ஆம் தேதிக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருக்கிறது.

இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக, வரும் 20ஆம் தேதி விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்திருந்தாலும், அவர் இந்த தொடரில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் தொடர்ந்து நிலவி வந்தது . காரணம், கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 5-வது போட்டியின்போது முதுகு பகுதியில் பும்ரா காயம் அடைந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த அவர் நீக்கப்பட்டுள்ளார்.

பும்ரா
”1996 இலங்கை அணி தற்போதைய இந்தியாவை 3 நாட்களில் தோற்கடிக்கும்..” – அர்ஜுன ரணதுங்கா

இந்நிலையில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் சாம்பியன்ஸ் டிராபியில் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே, ஜஸ்பிரீத் பும்ராவுக்கு பதில் இளம் வீரர் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐசிசியிடம் பிசிசிஐ கொடுத்த இறுதி பட்டியலில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து இந்த இரு மாற்றங்களை மட்டும் பிசிசிஐ செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com