ஓரங்கட்டிய MI அணி! விரக்தியில் ரோகித் சர்மா ரசிகர்கள்! X தளத்தில் வைரலாகும் பும்ரா பெயர்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்த ரோகித் சர்மாவை நீக்கி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கும் நிலையில், ஜஸ்பிரித் பும்ராவின் பெயர் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
rohit sharma - bumrah
rohit sharma - bumrahIPL

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியது அப்போதே பல கேள்விகளையும், விமர்சனங்களையும் எழவைத்தது. மற்றொரு அணியில் கேப்டனாக இருக்கும் ஒரு வீரரை ரூ.15 கோடி கொடுத்து அழைத்து வருவது நிச்சயமாக அடுத்த கேப்டனுக்கான முயற்சியாகவே பார்க்கப்பட்டது. அத்தகைய சூழலில் ஹர்திக் வருகையால் விரக்தியடைந்ததை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பதிவிட்ட ”சைலன்ஸ்” என்ற வார்த்தை வைரலானது.

rohit sharma - bumrah
rohit sharma - bumrah

இந்நிலையில், தற்போது அனைவரும் நினைத்ததை போலவே ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி, MI அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த அறிவிப்பானது ரோகித் சர்மாவின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் அதேவேளையில், ஜஸ்பிரித் பும்ராவின் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. பல ரோகித் சர்மா ரசிகர்கள் மும்பை அணியின் இந்த அறிவிப்பில் மகிழ்ச்சியடைவில்லை எனத் தெரிகிறது. அதேநேரத்தில் அடுத்த கேப்டனாக பும்ராவே இருந்திருக்க வேண்டும் என்ற கேள்வியையும் எக்ஸ் தளத்தில் எழுப்பி வருகின்றனர்.

rohit sharma - bumrah
“ஹர்திக் வருகையால் கோபத்தில் பும்ரா; எனக்காக இருந்தாலும் வலிக்கும்” - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!

சச்சினுக்கு பிறகு ரோகித் என்றால், ரோகித்திற்கு பிறகு பும்ரா தான்!

உங்களுக்காக அணியில் தொடர்ந்து அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வீரரை விட்டுவிட்டு, வேறு அணிக்கு சென்ற ஒருவரை எப்படி கேப்டனாக்குவீர்கள் என்ற கோவத்தை தற்போது மும்பை ரசிகர்கள் வெளிப்படுத்திவருகின்றனர். ரோகித்திற்காக வேதனையையும், பும்ராவிற்காக ஆதங்கத்தையும் வெளிப்படுத்திவரும் ரசிகர்கள், பும்ராவின் பெயரை டிரெண்ட் செய்துவருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் பும்ராவிற்கு ஆதரவாக பதிவிட்டிருக்கும் ஒரு ரசிகர், “ரோகித்தை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்குவது எனக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் மும்பை அணிக்காக நேர்மையாக இருந்துவரும் பும்ரா இருக்கும் போது பாண்டியாவை கேப்டனாக நியமித்தது வெட்கக்கேடானது. இதற்கு நீங்கள் ரோகித் மற்றும் பும்ரா இருவரையும் வேறொரு அணிக்கு வர்த்தகம் செய்யுங்கள். நீங்கள் செய்தது இருவருக்கும் அவமானமான செயல்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவர், “சச்சினுக்காக மும்பை அணியை ஆதரிக்க ஆரம்பித்தேன், பின்னர் ரோகித்திற்காகவும் பும்ராவுக்காகவும் மட்டுமே ஒட்டிக்கொண்டேன். நீங்கள் இருவரும் சேர்ந்து எங்களுக்கு கோப்பைகளை வென்று கொடுத்தீர்கள். எங்கள் கேப்டனாக ரோகித் இல்லாமல் போனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே மாதிரியாக இருக்காது. நன்றி ரோஹித். பாண்டியாவை வெறுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒருவர், “மன்னிக்கவும், இது என்ன மாதிரியான முடிவு? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் ஷர்மா தான் நீண்ட காலமாக உண்மையான தலைவராக இருந்து வருகிறார். இது நியாயமில்லை. நான் MI அணியின் ரசிகராக சொல்லவில்லை, இது அபத்தமானது. மேலும் ரோகித்துக்குப் பிறகு கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்றால், அது எல்லா வகையிலும் ஜஸ்பிரித் பும்ராவாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தங்களுடைய விரக்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.

rohit sharma - bumrah
சிதைந்ததா கேப்டன் கனவு.. மும்பை இந்தியன்ஸை Unfollow செய்தாரா பும்ரா? - பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com