4 ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார்.. நியூசிலாந்து டி20 Tour-ல் இடம்!
4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பிடித்துள்ளார். 2027 உலகக்கோப்பைக்கு முன்னதாக பவுலிங் மாற்றங்களை பரிசோதிக்கும் இந்திய அணியில், புவனேஷ்வர் குமார் இடம்பெறவேண்டும் என்ற குரலுக்கு மத்தியில் டி20 அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். இது ஒருநாள் உலகக்கோப்பை தேர்வுக்கான முன்முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக சரியான பவுலர்களை இந்திய அணிக்கு தேர்வுசெய்யவேண்டும் என்பதில் கம்பீர் & கோ பல முயற்சிகளை முன்னெடுத்துவருகிறது. அதனால் தான் போட்டிகளில் தோற்றால் கூட பரவாயில்லை, உலகக்கோப்பைக்கு சிறந்த பவுலரை தேர்வுசெய்யவேண்டும் என பல பந்துவீச்சு மாற்றங்கள் நடந்துவருகிறது. இதை நடந்துமுடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் நாம் பார்த்தோம்.
இந்தசூழலில் தான் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய பவுலரான புவனேஷ்வர் குமார் இடம்பிடிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துவருகிறது. அவருடைய சிறந்த ஃபார்மும், ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிவருவதும் புவனேஷ்வர் குமாரை பும்ராவிற்கு பேக்கப்பாக எடுத்துச்செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை அதிகமாக்கியுள்ளது.
இந்நிலையில் தான் நியூசிலாந்து மண்ணில் நடைபெறவிருக்கும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார் புவனேஷ்குமார். கடந்த 2022ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக டி20 போட்டியில் விளையாடியிருந்த புவனேஷ்வர், தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு அதே நியூசிலாந்துக்கு எதிராக கம்பேக் கொடுக்க உள்ளார்.
2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா, சிராஜ் உடன் புவனேஷ்குமாரும் இருக்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசை நிறைவேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து மண்ணில் புவனேஷ் சிறப்பாக செயல்பட்டார், அவரை விரைவில் ஒருநாள் அணியில் எதிர்ப்பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
தனது 10 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 21 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் புவனேஷ்வர் குமார் மொத்தமாக 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி:
ஷ்ரேயாஸ் ஐயர் [C], அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் [WK], வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷான் [WK], திலக் வர்மா [VC], அக்சர் படேல், சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், பிரின்ஸ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, மயங் யாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்

