\
புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்pti

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் புவனேஷ்வர் குமார்.. கேப்டனாக நியமனம்!

2026 ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் மற்றும் க்ருணால் பாண்டியா இருவரும் இடம்பெற்றுள்ளனர். புவனேஷ்வர் குமார் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த உள்ளார்.
Published on: 
Summary

2026 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் புவனேஷ்வர் குமார் இந்திய அணியின் கேப்டனாக தேர்வாகியுள்ளார். க்ருணால் பாண்டியா உள்ளிட்ட பல திறமையான வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர். புவனேஷ்வர் மீண்டும் நீல நிற ஜெர்சியில் களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் என்பது 11 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்கள் கொண்ட அணிகள், 6 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடும் போட்டியாகும். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடரில் இந்திய அணி 2005-ம் ஆண்டு கோப்பை வென்றது. நடுவில் சில காரணங்களால் நடத்தப்படாமல் இருந்த இத்தொடர் மீண்டும் 2024 முதல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2024, 2025 இரண்டு பதிப்புகளிலும் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் தலைமையில் விளையாடிய இந்திய அணி 10 போட்டிகளில் 9 போட்டிகளில் தோல்வியை சந்தித்து லீக் சுற்றோடு வெளியேறியது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

இந்தசூழலில் தான் 2026 ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணிக்கு புவனேஷ்வர் குமார் கேப்டனாக விளையாடவிருக்கிறார். அவருடன் க்ருணால் பாண்டியா, நிதிஷ் ராணா, நடராஜன், ஷஷாங் சிங், ராகுல் திரிப்பாத்தி, நிதிஸ் ராணா உள்ளிட்டோர் விளையாடவிருக்கின்றனர்.

தனது 10 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 21 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் புவனேஷ்வர் குமார், மீண்டும் சர்வதேச இந்திய அணியில் இடம்பிடிக்கவேண்டும் 2027 உலகக்கோப்பையில் அவர் விளையாடவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்தசூழலில் புவனேஷ்வர் குமார் மீண்டும் நீல நிற ஜெர்சிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அவர் சர்வதேச இந்திய அணிக்கு அழைக்கப்படவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் “இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், ஓமன், யுஏஇ, நேபாள், ஹாங் காங்” முதலிய 12 அணிகள் விளையாடுகின்றன. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி பாகிஸ்தான், யுஏஇ உடன் மோதவிருக்கிறது.

புவனேஷ்வர் குமார்
வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து கிண்டல்.. பாக். Ex வீரரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சயீம் அயூப்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com