வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றுமாறு கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்
வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றுமாறு கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்web

’வங்கதேச வீரர் முஸ்தஃபிசூரை வெளியேற்றுங்க..’ - KKR அணிக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்

வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாட தடை விதிக்கவேண்டும் என எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கேகேஆர் அணிக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது பிசிசிஐ.
Published on
Summary

வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக, பிசிசிஐ வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை KKR அணியிலிருந்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த முடிவு, இந்தியாவில் எழுந்த கடும் எதிர்ப்புகளின் பின்னணியில் எடுக்கப்பட்டது. KKR அணியின் உரிமையாளர் ஷாருக் கானுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறை கலவரத்தில் தீபு சந்திர தாஸ், அம்ரித் மண்டல் என்ற இரண்டு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்பலைகள் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல் ஏலத்தில் விலைக்கு வாங்கிய கொல்கத்தா அணி மீதும், அதன் உரிமையாளர் ஷாருக் கான் மீதும் திரும்பியது.

முஸ்தஃபிசூர் ரஹ்மான்
முஸ்தஃபிசூர் ரஹ்மான்

ஒருபக்கம் உஜ்ஜைனி சாமியார்கள் வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாடினால் மைதானத்தில் புகுந்து பிட்ச்சை தோண்டி எடுப்போம் என்று பகிரங்கமாக தெரிவித்தனர். மறுபக்கம் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஷாருக் கான் துரோகி என்று கடுமையான குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இந்தசூழலில் தான் கொல்கத்தா அணி வங்கதேச வீரரை வெளியேற்றுமா, பிசிசிஐ இதற்கு எதாவது அறிவிப்பு வெளியிடுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றுமாறு கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்
‘வங்கதேச வீரர் விளையாடினால் பிட்ச்சை பெயர்த்தெடுப்போம்..’ ஐபிஎல் தொடருக்கு மிரட்டல்!

வங்கதேச வீரரை வெளியேற்றுங்க..

2026 ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரே வங்கதேச வீரராக முஸ்தஃபிசூர் ரஹ்மான் இருக்கும் நிலையில், அவரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற குழப்பம் ஏற்பட்டது. வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் வங்கதேசத்தை சேர்ந்த வீரர்கள் விளையாட கூடாது என்ற எதிர்ப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து முக்கிய முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

வங்கதேச வீரர் - கேகேஆர் சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "சமீபத்திய நிலைமையை கவனித்த பிறகு, வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்கவேண்டும் என கேகேஆர் அணியிடம் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அவர் விடுவிக்கப்பட்டதும், கேகேஆரிடமிருந்து ஏதேனும் கோரிக்கை வந்தால், பிசிசிஐ அதைப் பரிசீலித்து மாற்று வீரரை வழங்கும்" என தெரிவித்துள்ளார்.

விரைவில் வங்கதேச வீரரை வெளியேற்றும் முடிவை கேகேஆர் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏலத்தில் முஸ்தஃபிசூரை எடுக்க கேகேஆர் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கடுமையான போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றுமாறு கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்
KKR அணியில் வங்கதேச வீரர்.. ஷாருக் கானை சாடிய பாஜக.. ஐபிஎல்லுக்குள் நுழைந்த அரசியல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com