CSK-க்கு அடிமேல் அடி.. அதிகாரப்பூர்வமாக மாத்ரே OUT.. அணியில் இணைந்த முக்கிய வீரர்!
2026 ஐபிஎல் தொடரில் தொடர் காயங்கள், தோனி, நாதன் எல்லிஸ், டெவால்ட் பிரேவிஸ் இல்லாமை காரணமாக தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டு வெற்றிகளால் கம்பேக் கொடுத்தும் மீண்டும் தோல்வி கண்டது. இதே நேரத்தில் சிறப்பாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே, கலீல் அகமத் காயம் காரணமாக சீசனில் இருந்து விலகினர். தற்போது காயம் என்ற பிரச்சனை அணியை பூதாகரமாக பாதித்துள்ளது.
2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் காயங்களால் வெற்றியை பெற தடுமாறிவருகிறது. தோனி இல்லாதது, நாதன் எல்லீஸ் இல்லாதது, டெவால்ட் பிரேவிஸ் தொடக்க போட்டிகளில் இல்லாதது போன்ற காரணங்களால் 3 போட்டிகளில் வரிசையாக தோற்ற சென்னை அணி, அடுத்தடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்று தரமான கம்பேக் கொடுத்தது.
சரியான பிளேயிங் 11 கிடைத்துவிட்டது, பிரேவிஸ் அணிக்கு திரும்பிவிட்டார், இனி எல்லாமே சரியாக அமைந்துவிடும் என நினைத்தபோது தான், அடுத்தபோட்டியில் மீண்டும் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி சொதப்பியது. ஒரு பக்கம் தோல்வி என்றால், மற்றொரு பக்கம் நடப்பு சீசனில் சிறப்பாக விளையாடிவந்த 2 சிஎஸ்கே வீரர்களான ஆயுஷ் மாத்ரேவும், கலீல் அகமதுவும் காயம் காரணமாக நடப்பு சீசனிலிருந்து விலகியுள்ளனர்.
இச்செய்தி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், தற்போது நாதன் எல்லிஸுக்கு பதிலாக எடுக்கப்பட்ட ஸ்பென்சர் ஜான்சன் அணியுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய எக்ஸ் தள பக்கத்தில் உறுதிசெய்துள்ளது. காயத்திலிருந்து மீண்டுவரும் இவர் எந்தளவு சென்னை அணிக்கு வலிமையை சேர்ப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

