Australian sports journalists critics PCB for boycott vs india t20WC
pcbx page

T20 WC | IND போட்டியை புறக்கணிப்பு செய்த பாகி... எச்சரிக்கும் Aus பத்திரிகையாளர்கள்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில், இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாட மாட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில், இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாட மாட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு, ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில், இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாட மாட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது, கிரிக்கெட் நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி நடத்தும் இந்தப் போட்டிக்கு, பாகிஸ்தான் பின்வாங்கியிருப்பது பின்னாளில் அதற்கு பெரிய எதிர்வினையாகும் அமையும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து பின்வாங்கியிருப்பதற்கு பலரும் கண்டனங்களையும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்களும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Australian sports journalists critics PCB for boycott vs india t20WC
pakistanx page

மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர்களான பீட்டர் லேலர் மற்றும் கிடியான் ஹைக் ஆகியோர், இந்த நடவடிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட்டை மேலும் தனிமைப்படுத்தலுக்குள் தள்ளிவிடும் என்று எச்சரித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள்,“இப்போது பாகிஸ்தானுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், இது அவர்களை மேலும் தனிமைப்படுத்தும் ஒரு நிலைக்குத் தள்ளுகிறது. கிரிக்கெட்டில் உலகின் மற்ற நாடுகளுக்கு பாகிஸ்தானின் முக்கியத்துவம் என்பது இந்தியாவுடனான போட்டியால்தான். அவர்கள் விளையாடவில்லை என்றால், அவர்களுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள்? வங்கதேசமா?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Australian sports journalists critics PCB for boycott vs india t20WC
T20 WC | இந்திய போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்.. ICC எத்தகைய தடைகளை விதிக்கும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com