இந்தியா மகளிர் - ஆஸ்திரேலியா
இந்தியா மகளிர் - ஆஸ்திரேலியா web

21-0.. தகர்க்க முடியாத ஆஸ்திரேலியா கோட்டை! ஹர்மன்ப்ரீத்தின் இந்தியா படுதோல்வி!

ஆஸ்திரேலியா மண்ணில் டி20 தொடரை 2-1 என கைப்பற்றி இந்தியா சாதனை படைத்த நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்தி ஆஸ்திரேலியா அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.
Published on
Summary

ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய மகளிர் அணி 214 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி 38.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெத் மூனி 76 ரன்கள் அடித்து ஆட்டநாயகி விருதை பெற்றார். தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

india - australia
india - australia

நடந்துமுடிந்த டி20 தொடரில் 2-1 என வெற்றிபெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்தது.

இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இந்தியா மகளிர் - ஆஸ்திரேலியா
“தயவுசெய்து ஆட வராதீங்க..” கேப்டன் சூர்யகுமாரை விளாசிய முன்னாள் இந்திய வீரர்!

பிரிஸ்பேன் மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 214 ரன்கள் மட்டுமே அடித்தது. ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் இருவரும் அரைசதமடித்த போதும் இந்தியாவால் பெரிய டோட்டலுக்கு செல்ல முடியவில்லை.

இந்தியா மகளிர் - ஆஸ்திரேலியா
இந்தியா மகளிர் - ஆஸ்திரேலியா

215 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா மகளிர் அணி 38.4 ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது. 76 ரன்கள் அடித்த பெத் மூனி ஆட்டநாயகி விருதை வென்றார்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. போட்டி நடந்த பிரிஸ்பேன் மைதானத்தில் இதுவரை 21 முறை ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆஸ்திரேலியா மகளிர் அணி ஒருமுறை கூட தோற்காமல் 21-0 என திகழ்ந்துவருகிறது.

இந்தியா மகளிர் - ஆஸ்திரேலியா
’அவர்களை மூச்சுவிட அனுமதி.. துன்புறுத்தாதே’ - அமீர் உடன் இந்தியாவை ட்ரோல் செய்த மற்றொரு PAK வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com