அரையிறுதிக்கு குறிவைக்கும் ஆஸ்திரேலியா.. சாம்பியன்ஸ் டிராபி ஸ்பாட்டுக்கு மல்லுக்கட்டும் இங்கிலாந்து!

நரேந்திர மோடி ஸ்டேடியம், அஹமதாபாத் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன
AUS v ENG
AUS v ENGTwitter

போட்டி 36: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

மைதானம்: நரேந்திர மோடி ஸ்டேடியம், அஹமதாபாத்
போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 4, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை ஆஸ்திரேலியா:

போட்டிகள் - 6, வெற்றிகள் - 4, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 8

புள்ளிப் பட்டியலில் இடம்: மூன்றாவது

சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் வார்னர் - 413 ரன்கள்

சிறந்த பௌலர்: ஆடம் ஜாம்பா - 16 விக்கெட்டுகள்

ஆடம் ஜாம்பா
ஆடம் ஜாம்பா

இந்த உலகக் கோப்பையில் தங்கள் முதலிரு போட்டிகளில் இந்தியாவையும், தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி அவ்விரண்டு போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியது. ஆனால் அதன்பிறகு நல்ல கம்பேக் கொடுத்து தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது கம்மின்ஸ் அண்ட் கோ. இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா, பரபரப்பாக நடந்த கடைசிப் போட்டியில் நியூசிலாந்தை 5 ரன்களில் வீழ்த்தியது.

2023 உலகக் கோப்பையில் இதுவரை: இங்கிலாந்து

போட்டிகள் - 6, வெற்றிகள் - 1, தோல்விகள் - 5, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2

புள்ளிப் பட்டியலில் இடம்: பத்தாவது

சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் மலான் - 236 ரன்கள்

சிறந்த பௌலர்: ஆதில் ரஷீத் - 8 விக்கெட்டுகள்

 ஆதில் ரஷீத்
ஆதில் ரஷீத்

ஒரு நடப்பு சாம்பியன் இவ்வளவு மோசமாக விளையாடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். வங்கதேசம் தவிர்த்து விளையாடிய அனைத்து அணிகளுக்கு எதிராகவும் தோல்வியடைந்திருக்கிறது இங்கிலாந்து. அந்த வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து 4 போட்டிகளில் தோற்றிருக்கிறது அந்த அணி. இந்தியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் 229 என்ற சிறிய இலக்கை சேஸ் செய்தபோது கூட 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து.

AUS v ENG
வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்! "2025 Champions Trophy"-க்கு தகுதிபெற்று சாதனை! மோசமான England-ன் நிலை?

மைதானம் எப்படி இருக்கும்?

அஹமதாபாத் ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைக்கும். ஆனால் இந்தப் போட்டி களிமண் ஆடுகளத்தில் ஆடப்படுமா இல்லை செம்மண் ஆடுகளத்தில் ஆடப்படுமா என்று தெரியவில்லை. அதுதான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். இதற்கு முன் இந்த உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகள் இங்கு நடைபெற்றன. அந்த இரு போட்டிகளிலுமே இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது.

எந்த ஆல்ரவுண்டர் இருக்கிறார், எந்த ஆல்ரவுண்டர் இல்லை?

ஆஸ்திரேலிய அணி வெற்றி மீது வெற்றி பெற்று நல்ல நிலையில் இருக்கிறது. ஹெட், வார்னர் போன்ற பேட்ஸ்மேன்கள் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். ஜாம்பா நன்கு விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். ஆனாலும் அணியில் ஒருசில பிரச்சனைகள் இருக்கவே செய்கிறது. அவர்கள் டாப் ஆர்டர் கொடுக்கும் நல்ல தொடக்கங்களை அவர்களின் மிடில் ஆர்டரால் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. அதேபோல் அவர்களின் வேகப்பந்துவீச்சும் சீராக இருப்பதில்லை. ஸ்டார்க் போட்டிக்கு பத்து வைட் வீசவேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் போல! இருந்தாலும் ஒருசில சூப்பர் செயல்பாடுகளால் கடந்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிட்டது ஆஸ்திரேலியா.

AUS v ENG
Shami | டாப் விக்கெட் டேக்கர்... ஆனாலும் அணியில் இடமில்லை... ஷமிக்கு எமனாக நிற்பது எது?

ஆனால் அடுத்ததாக இன்னொரு சிக்கல் முளைத்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா திரும்பியிருக்கிறார். கோல்ஃப் விளையாடியபோது காயமடைந்திருக்கும் கிளென் மேக்ஸ்வெல் கூட இந்தப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான். இப்படி இரு முக்கிய ஆல்ரவுண்டர்களை இந்தப் போட்டிக்கு முன் இழந்திருக்கிறது ஐந்து முறை சாம்பியன். இருந்தாலும் ஸ்டாய்னிஸ், கிரீன் போன்ற வீரர்கள் அந்த இடங்களை நிரப்புவார்கள் என்பதால் அது மிகப் பெரிய இழப்பாக இருக்காது என்று நம்பலாம்.

சாம்பியன்ஸ் டிராபி இடத்தையாவது தக்கவைக்குமா இங்கிலாந்து

தங்கள் வரலாற்றின் மிகமோசமான உலகக் கோப்பையை ஆடிக்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, இப்போது சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பிடிக்க போராடவேண்டியிருக்கிறது. முதல் 8 இடங்கள் பிடித்தால் மட்டுமே 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், அவர்களுக்கு இன்னும் 2 வெற்றிகளாவது அவசியம். அதற்கு பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் அனைத்துமே கைகொடுக்கவேண்டும். மன ரீதியாகவும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் இங்கிலாந்து கடைசி 3 போட்டிகளிலாவது தங்கள் திறனை நிரூபிக்கப் போராடவேண்டும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்

ஆஸ்திரேலியா - டிராவிஸ் ஹெட்: இந்த உலகக் கோப்பையில் விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்து மிரட்டியிருக்கிறார் டிராவிஸ் ஹெட். இதில் தடுமாறிக்கொண்டிருக்கும் இங்கிலாந்து பௌலிங் சிக்கினால்?!

இங்கிலாந்து - ஜாஸ் பட்லர்: இதற்கு மேல் இங்கிலாந்தின் தலையெழுத்து மாறவேண்டும் என்றால் கேப்டன் பட்லர் முன் நின்று அணியை வழிநடத்தவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com