13வது பிக் பாஷ் லீக்: பிரிஸ்பேன் ஹீட் அணி சாம்பியன்! குஷியில் குஜராத் டைட்டன்ஸ் - காரணம் இதுதான்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 13வது பிக் பாஷ் லீக் (BBL) சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பிரிஸ்பேன் ஹீட் அணி
பிரிஸ்பேன் ஹீட் அணிtwitter

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைப்போன்று, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் வேறுவேறு பெயர்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் 13வது பிக் பாஷ் லீக் (BBL) சீசன் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த தொடரில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி இன்று (ஜனவரி 24) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இவ்வணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜோஷ் ப்ரவுன் 38 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 53 ரன்கள் எடுத்தார். இவரை அடுத்து இடைநிலை வீரர் மேட் ரென்ஷா 22 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய சீன் அப்போட் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதையும் படிக்க: கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா; நிதிஷ்க்கு செக்? OBC மக்களை குறிவைக்கும் பாஜகவின் மாஸ்டர் ப்ளான்!

பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணி வீரர்கள், ஆரம்பம் முதலே தடுமாற்றத்தைச் சந்தித்தனர். அவ்வணியில் கேப்டன் மொய்சஸ் ஹென்றிகுய்ஸ் (25 ரன்கள்), ஜோஷ் பிலிப்பி (23 ரன்கள்) ஆகியோரைத் தவிர, வேறு எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.

இதனால் அவ்வணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் அந்த அணி 17.3 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து, பிரிஸ்பேன் ஹீட் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிக் பாஷ் கோப்பையையும் கைப்பற்றி மகுடம் சூடியது. பிரிஸ்பேன் அணி தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையும் படிக்க: ’கத்தி’ To ’கேப்டன் மில்லர்’: தமிழ் சினிமா உலகில் புயலை கிளப்பிய கதை திருட்டு சர்ச்சைகள்! ஓர் அலசல்

பந்துவீச்சில் அசத்திய ஸ்பென்சர் ஜான்சன் - குஷியில் குஜராத் டைட்டன்ஸ்

நடந்து முடிந்துள்ள பிக் பாஸ் லீக் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன் 11 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட் சாய்த்துள்ளார். இதில் ஒரு முறை 4 விக்கெட் எடுத்துள்ளார். ஸ்பென்சர் ஜான்சனை ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்து இருந்தது. அதிகம் தொகையுடன் ஏலம் எடுத்ததில் தப்பில்லை என்பதை ஜான்சன் நிரூபித்துள்ளதால் குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com