\
stephen fleming
stephen flemingweb

’சிஎஸ்கே 5 கோப்பைகளை வென்றதில் பிளெமிங்கின் பங்கு என்ன..?’ புகழ்ந்து பேசிய அனிருதா ஸ்ரீகாந்த்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகள் வென்ற பயிற்சியாளர், அதிக ஃபைனலுக்கு அழைத்துச்சென்ற பயிற்சியாளர், அதிக பிளேஆஃப்க்கு அழைத்துச்சென்ற பயிற்சியாளர் என சிஎஸ்கேவிற்கு ஃபிளெமிங் ஒரு லெகஸியை உருவாக்கினார்..
Published on
Summary

தோனி இல்லாமல் பிளெமிங் பயிற்சியாளராக ஒன்றும் செய்யவில்லை என்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் அனிருதா, சிஎஸ்கேவில் ஹெய்டன், முரளிதரன், ஹஸ்ஸி போன்ற சூப்பர் ஸ்டார்களை ஈகோ இல்லாமல் ஒருங்கிணைத்து வெற்றிக்குக் கொண்டு சென்றது பிளெமிங் தான் என்கிறார். டெக்னிக்ஸ் சொல்லும் கோச்சாக அல்ல, வீரர்களின் திறமையை வெளிக்கொணரும் மேனேஜராக அவர் சிஎஸ்கே லெகஸியில் முக்கிய இடம் பெற்றுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 17 ஆண்டுகள் பயணித்த ஸ்டீபன் பிளெமிங்கின் பயணம் 5 கோப்பைகள் வென்றபிறகு 2026ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. தோனி+பிளெமிங் கூட்டணியானது அழுத்தமான பல நேரங்களில் சிஎஸ்கே அணியை ஒன்றாக கரைசேர்த்தது. இணைந்த கைகளாக இருந்த இருவரின் பயணம் தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு வெற்றிப்பாதை சிக்கலானது.

தோனி - பிளெமிங்
தோனி - பிளெமிங்X

இந்தசூழலில் 2024 சீசனில் 5வது இடம், 2025-ல் 10வது இடம், 2026-ல் 8வது இடம் என அடுத்தடுத்து 3 மோசமான ஐபிஎல் சீசனுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃபிளெமிங் விலகியுள்ளார்.

தோனி இல்லையென்றால் பிளெமிங்கிற்கு ஒன்றுமே தெரியாது என்ற வகையில் பல விமர்சனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வைக்கப்பட்டுவரும் நிலையில், அவர் சென்னை அணிக்காக என்ன செய்தார்? சென்னை அணியின் லெகஸியில் அவருடைய பங்கு என்ன என்று சிஎஸ்கேவில் 6 ஆண்டுகள் பயணித்த அனிருதா ஸ்ரீகாந்த் வெளிப்படுத்தியுள்ளார்.

stephen fleming
142 ஆண்டு இடைவெளிக்கு பின் அங்கீகாரம்.. வரலாற்று டெஸ்ட்டில் 4 மகத்தான சாதனை படைத்த இந்தியா!

சீக்கா உடனான யூடியூப் உரையாடலில் பேசியிருக்கும் அனிருதா ஸ்ரீகாந்த், “ஸ்டீபன் பிளெமிங்கின் கோச்சிங் குறித்து கடந்த 3 வருடங்களாக விமர்சிக்கப்படுகிறது. தோனி இல்லனா பிளெமிங் இல்ல என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. அப்படி பார்த்தால் தோனி இருந்தபோது கோச்சாக இருந்த யாரையும் நாம் பயிற்சியாளராக சொல்ல முடியாது. நான் சிஎஸ்கே அணியில் 6 வருடங்கள் அவருடன் இருந்திருக்கிறேன். அவரை ஒரு சூப்பர் ஸ்டார் வீரர்கள் அடங்கிய அணிக்கான பயிற்சியாளர் என்று கூறலாம். உண்மையாக சொல்லப்போனால் தற்போது அவர் மும்பை அணிக்கு சரியான பயிற்சியாளராக இருப்பார். ஏனென்றால் அவரால் சூப்பர் ஸ்டார் வீரர்களிடம் இருக்கும் ஈகோவை எப்படி கையாள்வது என்று நன்றாக தெரியும். சிஎஸ்கேவில் தோனிக்கு கீழ் எப்படி வேலைசெய்யவேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவரை பயிற்சியாளர் என்று சொல்வதை விட வீரர்களை சரியாக கையாளக்கூடிய மேனேஜர் என்று சொல்லலாம். அவர் வீரர்களிடம் டெக்னிக்ஸ், டேக்டிக்ஸ் பற்றி பேசுவதை விட, அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டுவருவதற்கான இடத்தை உருவாக்கி கொடுப்பார்.

சிஎஸ்கே அணியில் மேத்யூ ஹெய்டன், முத்தையா முரளிதரன் என பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருந்திருக்கின்றனர். அத்தனை பேரிடமும் ஈகோ இல்லாமல் எப்படி அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற யுக்தி அவருக்கு தெரியும். 2010-ல் மேத்யூ ஹெய்டன் சரியாக விளையாடாதபோது மைக்கேல் ஹஸ்ஸி பெஞ்சில் இருந்தார். அவர் அந்த காம்பினேஷனை மாற்ற ஹெய்டனிடம் பேசியவிதம் எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கிறது, பிளெமிங்கின் அணுகுமுறையால் ஹெய்டன் எளிதாக ஒப்புக்கொண்டார். அதற்குபிறகு மைக் ஹஸ்ஸி மற்றும் முரளி விஜயின் காம்பினேஷனில் சிஎஸ்கே அணி அடுத்த 3 ஆண்டுகள் டாமினேட் செய்தது. சிஎஸ்கேவின் இந்த சக்சஸ்ஸுக்கு பின்னால் இருந்தது ஸ்டீபன் பிளெமிங் தான், அதற்கான பாராட்டை நாம் அவருக்கு வழங்க மறந்துவிடுகிறோம்” என பேசியுள்ளார்.

stephen fleming
’MS தோனி to ராகுல் டிராவிட்..’ அடுத்த சிஎஸ்கே பயிற்சியாளராக வாய்ப்புள்ள 5 பேர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com