கருண் நாயர், அகர்கர்
கருண் நாயர், அகர்கர்pt web

“உங்களுக்காக வருத்தப்படுகிறேன் கருண்” ஆதரவாக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள்.. அகர்கர் சொல்வதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சமீப காலமாக சிறப்பாக செயல்படும் கருண் நாயர் பெயர் பட்டியலில் இல்லாதது விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தேர்வு செய்யப்படாத கருண் நாயர்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை கேப்டனாக சுப்மன் கில் செயல்பட இருக்கிறார்.

வீரர்கள் விபரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப், ஜெய்ஸ்வால், பந்த், ஜடேஜா

iccchampionstrophy
iccchampionstrophy

இந்நிலையில் கருண் நாயரை ஏன் தேர்வு செய்யவில்லை என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. நடந்துவரும் விஜய் ஹசாரே தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 752 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 752.00 ஆக உள்ளது. தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்துள்ளார். சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் கருண் நாயரின் செயல்பாடுகளைப் பாராட்டி பதிவிட்டிருந்தனர். இத்தகைய சூழலில்தான், அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். சிறப்பாக செயல்பட்டும் அவரை அணியில் தேர்வு செய்யாதது ஏன் என கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கருண் நாயர், அகர்கர்
குளிர்காலம் | இந்தியாவில் சராசரி வெப்பநிலை உயர்வு.. ஆய்வில் தகவல்!

உங்கள் விதியையே மீறுவது போன்றது?

பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கருண் நாயர் தேர்வு செய்யப்படாததற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள முன்னாள் ஆர்சிபி வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, “கருண் நாயரை தேர்வு செய்யாதது உள்நாட்டு கிரிக்கெட்டை கட்டாயமாக்கும் உங்களது சொந்த விதியையே மீறுவது போன்றது. கருண் நாயருக்காக வருத்தப்படுகிறேன்.

7 ஆட்டங்களில் 752 ரன்கள் எடுத்த ஒருவருக்கு ஏன் விதிவிலக்கு அளிக்கக்கூடாது. அவரது ஃபார்மை பயன்படுத்துங்கள். கரீபியனில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் கில் உட்பட 4 வீரர்கள் ரிசர்வ் வீரர்களாக இருந்தனர். 2015 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையிலும் தவால் குல்கர்னி ரிசர்வ் வீரராக இருந்தார். ஜெய்ஸ்வால் கூடுதலான தொடக்க வீரரா? கில் அல்லது ரோகித் காயமடைந்தால் கே.எல். ராகுல் தொடக்க வீரராக செயல்பட முடியும். துபாய் போன்ற சூழ்நிலைகளில் மிடில் ஓவர்களில் இன்னிங்ஸை கொண்டு செல்ல ஒருவர் தேவை. அவரை 16 ஆவது வீரராகவாவது சேர்த்துக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கருண் நாயர், அகர்கர்
சாம்பியன்ஸ் டிராபி 2025 | இந்திய அணி அறிவிப்பு.. பும்ராவிற்கு இடமா? விக்கெட் கீப்பர் யார்?

அகர்கர் சொல்வதென்ன?

இந்நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கருண் நாயர் தேர்வு செய்யப்படாதது குறித்து விளக்கமளித்துள்ளார். தேர்வுக்குழு கருண் நாயரை தேர்வு செய்வது தொடர்பாக விவாதித்ததாகவும் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தற்போதைய அணியில் ஓர் இடத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். தேர்வு செய்யப்பட்ட வீரர்களைப் பாருங்கள். அனைவரும் 40க்கும் மேல் சராசரியை வைத்திருக்கிறார்கள். சராசரியாக 750க்கும் மேற்பட்ட ரன்களை அடிப்பது என்பது பெரிய விஷயம்தான். ஆனால், 15 பேர் கொண்ட அணிக்கு அனைவரையும் அனைவரையும் எடுக்க (Fit) முடியாது. அவரது செயல்திறன் நிச்சயமாக கவனிக்க வைக்கிறது. வீரர்களில் யாருக்கேனும் ஃபார்ம் இழப்பு அல்லது காயங்கள் ஏற்படும் பட்சத்தில் நிச்சயமாக அவரைத் தேர்வு செய்வது குறித்தான பரிசீலனை நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

கருண் நாயர் மொத்தமாக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர். அதுவும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக நடந்த போட்டி. இது மற்றும் அவருக்கு 33 வயதாகிறது என இரண்டையும் காரணங்களாக தேர்வுக்குழு கருதுகிறது என செய்திகள் வெளிவருகின்றன. சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் பார்மை கருத்தில் கொண்டால் கருண் நாயர் செயல்பாடுகளை குறை சொல்லிவிட முடியாது என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டுவதையும் நாம் கடந்துவிட முடியாது.

கருண் நாயர், அகர்கர்
ரஞ்சி டிராபி தொடரில் இருந்து விலகும் கோலி மற்றும் ராகுல்.. என்ன காரணம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com