8 அணிகள் பங்கேற்கும் U19 ஆசியக் கோப்பை; டிச.12இல் தொடங்குகிறது.. டிச.14ல் IND - PAK மோதல்!
U19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 12ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) தொடங்க உள்ளது. அதன்படி, டிசம்பர் 14ஆம் தேதி IND - PAK ஆகிய அணிகள் மோத இருக்கின்றன.
U19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 12ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) தொடங்க உள்ளது. இதில் 8 கலந்துகொள்ள உள்ளன. இத்தொடர், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற இருக்கும் U19 உலகக் கோப்பைக்கான ஆயத்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மலேசியா, நேபாளம் மற்றும் போட்டியை நடத்தும் UAE ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகள் இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தியா, பாகிஸ்தான், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் A பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் B பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 50 ஓவர்கள் வடிவில் நடைபெற இத்தொடரில், இந்திய அணி டிசம்பர் 12ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொள்கிறது. அடுத்து டிசம்பர் 14ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இறுதியாக மலேசியாவை டிசம்பர் 16ஆம் தேதி சந்திக்கிறது. அரையிறுதிப் போட்டிகள் 19ஆம் தேதியும் இறுதிப்போட்டி 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அணியில், வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (WK), ஹர்வன்ஷ் சிங் (WK), யுவராஜ் கோஹில், கனிஷ்க் சவுகான், கிலன் ஏ. படேல், நமன் புஷ்பக், டி. தீபேஷ், ஹெனில் சிங், ஏ. ஜார்ஜ்ஹவ் படேல், கிஷன் குமார், கிஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

