அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மாweb

931 புள்ளிகள்| யாரும் படைக்காத சாதனை.. வரலாறு படைத்த அபிஷேக் சர்மா!

ஐசிசியின் உலக தரவரிசைப்பட்டியலில் அதிக புள்ளிகள் பெற்று வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார் இந்தியாவின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா.
Published on

2025 ஆசியக்கோப்பை தொடரில் அற்புதமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய இந்திய வீரர் அபிஷேக் சர்மா, 7 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 314 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஆசியக்கோப்பை டி20 வரலாற்றில் ஒரு தொடரில் 300 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த அபிஷேக், தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

indian player abhishek sharma
அபிஷேக் சர்மாஎக்ஸ் தளம்

இந்நிலையில் ஆசியக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டி20 தரவரிசையில் 931 புள்ளிகள் பெற்று வரலாறு படைத்துள்ளார் அபிஷேக்.

அபிஷேக் சர்மா
மகளிர் உலகக்கோப்பை| அசத்திய மிடில் ஆர்டர்.. இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி!

வரலாறு படைத்த அபிஷேக்..

ஐசிசி தரவரிசை பட்டியல் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், டி20 பேட்டிங் தரவரிசையில் 931 புள்ளிகள் பெற்றிருக்கும் அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்தார்.

இதுவரை டி20 பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் பெற்ற 919 புள்ளிகளே அதிகபட்ச ரேட்டிங்காக இருந்த நிலையில், அதனை முறியடித்து அபிஷேக் சர்மா புதிய வரலாறு படைத்து அசத்தியுள்ளார்.

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்:

1. அபிஷேக் சர்மா - இந்தியா - 931 புள்ளிகள்

2. டேவிட் மலான் - இங்கிலாந்து - 919 புள்ளிகள்

3. சூர்யகுமார் யாதவ் - இந்தியா - 912 புள்ளிகள்

4. விராட் கோலி - இந்தியா - 909 புள்ளிகள்

5. ஆரோன் பிஞ்ச் - ஆஸ்திரேலியா - 904 புள்ளிகள்

6. பாபர் அசாம் - பாகிஸ்தான் - 900 புள்ளிகள்

அபிஷேக் சர்மா
180 சர்வதேச போட்டிகளுக்கு பின் முதல் வெற்றி.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வரலாறு படைத்தது நேபாளம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com