180 சர்வதேச போட்டிகளுக்கு பின் முதல் வெற்றி.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வரலாறு படைத்தது நேபாளம்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாள அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் யுஏஇ-ல் உள்ள சார்ஜா மைதானத்தில் நடந்துவருகிறது.
வரலாறு படைத்த நேபாளம்..
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாள அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று தொடங்கியது. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி, 20 ஓவரில் 148 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் பவுடல் 38 ரன்கள் அடித்தார்.
149 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 129 ரன்களை மட்டுமே அடித்து படுதோல்வியை சந்தித்தது. நேபாள அணியில் 7 பவுலர்கள் பந்துவீசிய நிலையில், அதில் 6 பேர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர்.
ஒரு முழு உறுப்பினர் கொண்ட கிரிக்கெட் நாட்டிற்கு எதிராக நேபாளம் பதிவுசெய்த முதல் வெற்றி இதுவாக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டது. கிட்டத்தட்ட 180 சர்வதேச போட்டிகளுக்கு பிறகு இத்தகைய வரலாற்று வெற்றியை நேபாளம் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது.