அபிஷேக் போரல்
அபிஷேக் போரல்PT

டார்கெட் என்னமோ 273 தான்.. அதிலும் 170* ரன்கள் குவித்த அபிஷேக் போரல்! அசத்தலான ஆட்டம்!

2024-2025 விஜய் ஹசாரே டிரோபியில் பெங்கால் அணிக்காக விளையாடிய அபிஷேக் போரல் 170 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
Published on

2024-2025 விஜய் ஹசாரே கோப்பை தொடரானது டிசம்பர் 21 முதல் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 18ம் தேதிவரை நடைபெறுகிறது. 38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 21-ம் தேதியான இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

விஜய் ஹசாரே
விஜய் ஹசாரே

இன்று முதல்சுற்று போட்டிகள் நடந்த நிலையில், டெல்லி அணியானது பெங்கால் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

அபிஷேக் போரல்
இந்தஅடி தேர்வுக்குழுவுக்கு கேட்கணும்.. பறந்த 10 சிக்சர்கள்.. 55 பந்தில் 114 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ்!

170 ரன்கள் குவித்து அசத்திய அபிஷேக் போரல்..

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத்தின் 79 ரன்கள் ஆட்டத்தால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது.

273 ரன்கள் இலக்குடன் விளையாடிய பெங்கால் அணியில் தொடக்கவீரராக களமிறங்கிய அபிஷேக் போரல் 18 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 130 பந்துகளுக்கு 170 ரன்கள் அடித்து நாட் அவுட்டுடன் போட்டியை முடித்துவைத்தார். 41.3 ஓவரில் 274 ரன்களை சேர்த்த பெங்கால் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய 22 வயதான அன்கேப்டு வீரரான அபிஷேக் போரல், 2025 ஐபிஎல் தொடரில் 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் போரல்
Top 10 Sports | “சச்சின், கவாஸ்கருக்கு நிகரான அஸ்வின்” முதல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அட்டவணை வரை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com