“இவரை எப்படி தலைசிறந்த டெஸ்ட் வீரர் என கூறமுடியும்?”- ரூட்டை கடுமையாக தாக்கிய வில்லியர்ஸ்!

“நான் இப்படி சொல்லுவது மிகப்பெரிய ஸ்டேட்மெண்ட் என்று எனக்கு தெரியும், ஆனால் அதை கூறாமல் இருக்க முடியவில்லை” என்று ஜோ ரூட்டை டிவில்லியர்ஸ் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
Joe Root
Joe RootCricinfo

எக்காலத்திற்கும் சிறந்த வீரர்கள் என்று சொல்லப்படும் வீரர்களில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்றோர் உண்டு. இப்பட்டியலில் ஜோ ரூட்டும் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை குவித்திருக்கும் ஜோ ரூட், இங்கிலாந்து கிரிக்கெட்டில் ”பாஸ்பால்” ஆட்டம் அறிமுகமான பிறகு ஒரு கிளாசிக்கல் கிரிக்கெட் வீரர் என்ற கோட்டிலிருந்து விலகி, அடித்து ஆடும் முயற்சியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஜோ ரூட், இங்கிலாந்து
ஜோ ரூட், இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் தூணாக செயல்பட்டுவந்த ஜோ ரூட், பாஸ்பால் ஆட்டத்தால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ’29 & 2 ரன்கள், 5 & 16 ரன்கள், 16 & 7 ரன்கள்’ முதலிய சொற்ப ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். நல்ல தொடக்கம் கிடைத்த போதும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவது, தெளிவில்லாமல் ஆடுவது, எந்த பிளானிங்கும் இல்லாமல் வெறும் அடித்து ஆடும் முயற்சியில் மட்டுமே விளையாடுவது என பல மோசமான முறைகளில் அவுட்டாகி வெளியேறிவருகிறார்.

இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி வெளியேறிய பிறகு, “டெஸ்ட் வரலாற்றில் மிகவும் முட்டாள்தனமான ஷாட்”, “அருவருக்கத்தக்க மற்றும் தேவையற்ற ஷாட்”, “ரூட்டின் இந்த மோசமான ஆட்டம், அவரை சிறந்த வீரர் என்ற நிலையிலிருந்து கீழே தள்ளியுள்ளது” என்ற பல்வேறு மோசமான விமர்சனங்களை இங்கிலாந்து ஊடகங்கள் ஜோ ரூட் மீது வைத்தன.

ab de villiers
ab de villiers

இந்நிலையில் அதேபோலான ஒரு மோசமான ஸ்டேட்மெண்ட்டை ஜோ ரூட் மீது வைத்துள்ளார், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ்.

Joe Root
”ரூட் ஆடியது முட்டாள்தனமான ஷாட்”! விளாசும் UK ஊடகங்கள்! பாஸ்பாலால் நல்ல வீரரை இழக்கிறதா இங்கிலாந்து?

“ரூட்டை எப்படி தலைசிறந்த டெஸ்ட் வீரர் என்று கூறமுடியும்?”

“ஜோ ரூட்டுக்கு எதிராக முதலில் விளையாடிய போது தலைசிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவர் என்ற உணர்வு தோன்றியது. ஆனால் தற்போது இவரை எப்படி அப்படி கூறுவது என்று தோன்றுகிறது” என கடுமையான விமர்சனத்தை டிவில்லியர்ஸ் வைத்துள்ளார்.

ஜோ ரூட் குறித்து தன்னுடைய யூ-டியூப் வீடியோவில் பேசியிருக்கும் அவர், “நான் ஜோ ரூட்டுக்கு எதிராக முன்னர் விளையாடியபோதெல்லாம், ​​நான் இதுவரை விளையாடிய சிறந்த டெஸ்ட் பேட்டர்களில் அவரும் ஒருவர் என்று உணர்ந்தேன். ஆனால் அது இப்போது மாறிவிட்டது, அதற்கு பாஸ்பால்தான் காரணம்.

இது ஒரு பெரிய ஸ்டேட்மெண்ட் என்று எனக்குத் தெரியும், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்கள் விளையாடும் போது, அவரை வெளியேற்றுவது கடினமான ஒன்று என்று உங்களுக்கு தானாகவே தோன்றும். ஆனால் இப்போது அவர் ரிவர்ஸ் ஸ்வீப்களில் அவுட் ஆகிறார். எக்காலத்திற்கும் சிறந்த ஆட்டத்தை புறந்தள்ளிவிட்டு, விதிமுறைகளை வெளியே வீசுகிறார் அவர். எனக்கு அது பிடிக்கவில்லை” என்று டி வில்லியர்ஸ் கடுமையாக கூறியுள்ளார்.

joe root
joe root

மேலும் பாஸ்பாலில் அனைவருமே அடித்து ஆடவேண்டுமா என்ன? என்ற கேள்வியை வைத்திருக்கும் அவர், "ரூட் போன்ற வீரர்கள் அணியிடம் கேளுங்கள். உங்கள் இயல்பான விளையாட்டை விளையாடுங்கள். உங்கள் பேட்டிங் வரிசையின் வலுவான நபர் நீங்கள்தான் என்று சொல்லுங்கள். பென் டக்கெட் அல்லது பென் ஸ்டோக்ஸ் ஆக்ரோஷமாக விளையாடட்டும், ஆனால் ரூட் போன்றோர் நீண்ட நேரம் பேட் செய்யட்டும்" என்று கூறியுள்ளார்.

Joe Root
“MS தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தோம்” குற்றச்சாட்டு வைத்த முன்னாள் வீரர்கள்..10 பேரின் கதை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com