ரோகித் சர்மாவிற்காக எமோசனல் பதிவிட்ட சூர்யகுமார் யாதவ், தவால் குல்கர்னி! உடையும் மும்பை இந்தியன்ஸ்?

ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்களை தாண்டி உடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் வீரர்களும் எமோசனலாக பதிவிட்டு வருகின்றனர்.
சூர்யா-குல்கர்னி-ரோகித்
சூர்யா-குல்கர்னி-ரோகித்web

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியது அப்போதே பல கேள்விகளையும், விமர்சனங்களையும் எழவைத்தது. மற்றொரு அணியில் கேப்டனாக இருக்கும் ஒரு வீரரை ரூ.15 கோடி கொடுத்து அழைத்து வருவது நிச்சயமாக அடுத்த கேப்டனுக்கான முயற்சியாகவே பார்க்கப்பட்டது. அத்தகைய சூழலில் ஹர்திக் வருகையால் விரக்தியடைந்த வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பதிவிட்ட ”சைலன்ஸ்” என்ற இன்ஸ்டா ஸ்டோரி வைரலானது.

இந்நிலையில் தற்போது நினைத்ததைபோலவே ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களும் ரோகித்திற்காக எமோசனலாக பதிவிட்டு வருகின்றனர்.

இதயம் உடைக்கும் பதிவை பதிவிட்ட சூர்யகுமார்!

ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், தற்போது இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்படும் அளவிற்கு முன்னேறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பெரிய அணிகளுக்கு எதிரான பைனல் போன்ற பெரிய போட்டியில்கூட சூர்யாவை தக்கவைத்த ரோகித் சர்மா, அவருடைய முன்னேற்றத்தில் பெரிய பங்காற்றினார். அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன்பாகவே சூர்யாவின் திறமை மீது நம்பிக்கை வைத்த ரோகித் சர்மா, அவர் எதிர்காலத்தில் சிறந்த வீரராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கையும் வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் ஒரு இதயம் உடைக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

தவால் குல்கர்னி பதிவிட்ட ஸ்பெசல் ரோகித் சர்மா போஸ்ட்!

ரோகித் சர்மாவின் நண்பரும், சக மும்பை கிரிக்கெட் வீரருமான தவால் குல்கர்னியும் ரோகித் சர்மாவிற்காக பதிவிட்டுள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டிருக்கும் அவர், “45” என ரோகித் சர்மாவின் ஜெர்சி நம்பரை மட்டும் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து ரசிகர்கள் ரோகித் சர்மாவிற்காக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com