\
jaiswal
jaiswalweb

ஜெய்ஸ்வாலுக்கு வாழ்நாள் தடையா? இலங்கை பவுலரை அடிக்க பாய்ந்த சம்பவம்! ஐசிசி என்ன நடவடிக்கை எடுக்கும்?

இலங்கை பவுலர் பெர்னாண்டோவை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அடிக்க பாய்ந்த சம்பவம் கிரிக்கெட் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published on
Summary

தேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வாலை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் இந்திய தொடக்க ஆட்டக்காரரான அவர் இலங்கை பவுலர் பெர்னாண்டோவை நோக்கி வேகமாக நகர்ந்தார். இந்த மோதல் இறுதியில் இரு வீரர்களும் தங்கள் தலைகளை மோதிக்கொண்டதில் முடிந்தது. இந்த காரசாரமான மோதலால் ஜெய்ஸ்வாலுக்கு 5 போட்டிகளில் விளையாட தடை முதல் வாழ்நாள் தடை வரையிலான தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐசிசி விதிகள் என்ன சொல்கின்றன பார்க்கலாம்..

கொலம்போவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களம்கண்ட ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகள் உதவியுடன் 53 பந்தில் 45 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். அவருடைய விக்கெட்டை ஒரு பக்கா பிளான் போட்டு அள்ளிய இலங்கை பவுலர் அசிதா பெர்னாண்டோ அசத்தினார்.

17வது ஓவரின் கடைசிப் பந்தில், ஜெய்ஸ்வாலை க்ளீன் பவுல்ட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தபோது பந்துவீச்சாளருக்கும் பேட்ஸ்மேனுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததால், பல இலங்கை வீரர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டனர். மறுபக்கம் இருந்த தேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வாலை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் இந்திய தொடக்க ஆட்டக்காரரான அவர் பெர்னாண்டோவை நோக்கி வேகமாக நகர்ந்தார். இந்த மோதல் இறுதியில் இரு வீரர்களும் தங்கள் தலைகளை ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டதில் முடிந்தது.

ஐசிசி நடத்தை விதிகளின்படி, சர்வதேசப் போட்டியின் போது உதைத்தல், குத்துதல் அல்லது சண்டையிடுதல் போன்ற வன்முறைச் செயல்களால் உடல் ரீதியான பாதிப்பு அல்லது காயத்தை ஏற்படுத்துவது குற்றமாகும். இவை நிலை 4 குற்றங்களின் கீழ் வருகின்றன. இப்படியான ஐசிசியின் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் மிகக் கடுமையான தண்டனைகள் கிடைக்க வாய்ப்புண்டு. நிலை 4 விதிமீறல்களுக்கான தண்டனைகளாக, 5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிப்பது முதல், சம்பந்தப்பட்ட வீரருக்கு வாழ்நாள் தடை வரை விதிக்கப்படலாம்" என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இப்படி ஜெய்ஸ்வால் மைதானத்தில் மற்ற வீரர்களுடன் மோதுவது இது முதல்முறையல்ல. 2022 துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​நடுவர் எச்சரிக்கை விடுத்தபிறகும், ஜெயஸ்வால் தென் மண்டல அணி வீரருடன் மீண்டும் மீண்டும் வாக்குவாதங்களில் ஈடுபட்டார். அப்போது சொல்வதை ஜெய்ஸ்வால் கேட்காதபோது, நிலைமை மோசமடையும் அபாயம் ஏற்பட்டதை அடுத்து, மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலையிட்டு, இறுதியில் ஜெய்ஸ்வாலை மைதானத்திலிருந்து வெளியேற்றி ஆடை மாற்றும் அறைக்குத் திருப்பி அனுப்பினார்.

இந்தசூழலில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடந்த மோதலுக்கு ஐசிசி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை..

jaiswal
1 1/2 நாளில் முடிந்த டெஸ்ட்.. திட்டமிட்டே செய்ததா ஆஸி? இந்தியா என்றால் மட்டும் இளக்காரமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com