2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யவிருக்கும் 4 இளம்வீரர்கள்
2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யவிருக்கும் 4 இளம்வீரர்கள்pt

CSK-வின் மாஸ்டர் பிளான்; இந்த 19, 20, 24 வயது வீரர்கள்தான் டார்கெட்.. தரமான ஆல்ரவுண்டர்ஸ்!

2026 ஐபிஎல் ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், ஆண்ட்ரே ரஸ்ஸல், மேக்ஸ்வெல் இல்லாத சூழலில் சென்னை அணி 3 இளம் வீரர்களை குறிவைத்துள்ளது..
Published on

2026 ஐபிஎல்லுக்கு முன்னதாக தங்களுடைய மேட்ச் வின்னிங் வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் பதிரானா இருவரையும் வெளியேற்றியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த 4 வருடத்திற்கான எதிர்கால அணியை கட்டமைக்கும் முயற்சியில் இருக்கிறது..

ஏலத்தில் எப்போதும் வயதான அனுபவமிக்க வீரர்களை குறிவைக்கும் சிஎஸ்கே அணியின் வியூகம் 2025 ஐபிஎல்லில் பெற்ற மரண அடிக்கு பிறகு மாறியுள்ளது..

dhoni - ruturaj
dhoni - ruturajweb

தோனி இல்லாதபோதும் எதிர்கால சிஎஸ்கே அணி ஜொலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் சென்னை அணி நிர்வாகம், ஆயுஸ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸை தொடர்ந்து 3 இளம்வீரர்களை குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

2026 ஏலத்தில் பெரிய பெயர்களுக்கு மற்ற அணிகள் போட்டிப்போடும் நிலையில் 3 அன்கேப்டு வீரர்கள் மீதும், ஒரு வெளிநாட்டு ஆல்ரவுண்டர் மீதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவனம் செலுத்தியுள்ளது.. யார் அந்த வீரர்கள் பார்க்கலாம்..

2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யவிருக்கும் 4 இளம்வீரர்கள்
23 வயதில் TEST, T20 & ODI மூன்றிலும் சதம்.. முதல் ஒருநாள் சதமடித்தார் ஜெய்ஸ்வால்!

சிஎஸ்கே அணியில் இருக்கும் குறைகள் என்ன?

தற்போதைய சிஎஸ்கே அணியில் ஆயுஸ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், உர்வில் படேல், டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி, நூர் அகமது, கலீல் அகமது, நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சௌத்ரி, குர்ஜப்னீத் சிங், ராமகிருஷ்ண கோஷ் முதலிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

டெவால்ட் பிரேவிஸ்
டெவால்ட் பிரேவிஸ்x

இதில் ஆல்ரவுண்டர் வகையில் ஜேமி ஓவர்டன் மற்றும் ஷிவம் துபே மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவு இருக்கின்றனர், அதேபோல நூர் அகமது, ஷ்ரேயாஸ் கோபால் என இரண்டு லெக் ஸ்பின்னர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சிஎஸ்கே ஜெர்சி அணிந்த சஞ்சு சாம்சன்
சிஎஸ்கே ஜெர்சி அணிந்த சஞ்சு சாம்சன்web

இந்தசூழலில் சிஎஸ்கே அணிக்கு தேவையாக பேக்கப் ஒப்பனர், தோனிக்கு மாற்றான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், ஆஃப் ஸ்பின்னர்கள், பேட்டிங் ஆல்ரவுண்டர், ஃபினிசிங் ஹிட்டர் மற்றும் டெத் ஓவர் ஸ்பெசலிஸ் பவுலர் என 6 இடங்களுக்கு தேவை இருக்கிறது.. இந்த 6 இடங்களையும் பூர்த்திசெய்யும் வகையிலான 4 வீரர்கள் மீது சிஎஸ்கேவின் கவனம் திரும்பியுள்ளது.

2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யவிருக்கும் 4 இளம்வீரர்கள்
’இதனால தான் இவங்க 2 பேரும் லெஜெண்டா இருக்காங்க..’ கோலியை போலவே பேசிய ஸ்டார்க்!

சிஎஸ்கே குறிவைக்கும் 4 வீரர்கள்..

19 வயது - ராஜஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேஸ்மேனான கார்த்திக் சர்மா சமீபமாக இணையத்தில் அதிகம் ஈர்க்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீரராக ஜொலித்துவருகிறார். மிடில் ஆர்டரில் களமிறங்கி பெரிய சிக்சர்களை ஹிட் செய்யும் இவருடைய திறமை, முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கவனத்தை ஈர்த்தது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் 4வது இடத்தில் பேட்டிங் செய்யும் ஷர்மா, ராஜஸ்தான் அணிக்காக 11 டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை 27 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 316 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 164.58ஆக உள்ளது. ரஞ்சி டிராபியில் 7 சிக்சர்களுடன் 139 பந்துகளில் 100 ரன்களும் சமீபத்தில் விளாசியிருந்தார். இவர் மீது 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணியின் கண்கள் விழுந்துள்ளன.

2026 ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுக்கும் முயற்சியில் சிஎஸ்கே கவனம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.

2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யவிருக்கும் 4 இளம்வீரர்கள்
”நம் பெருமையை இழக்க முடியாது; சின்னசாமி மைதானத்தில்தான் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்” - DKS உறுதி

20 வயது இளம்வீரர்

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான பிரசாந்த் வீர், உத்திரபிரதேச டி20 லீக்கில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வென்ற பிறகு சென்னை ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடரில் 155.34 ஸ்ட்ரைக் ரேட்டில் 3 அரைசதங்களுடன் 320 ரன்கள் அடித்து மிரட்டினார். முக்கியமாக அவர் அணிக்காக பல போட்டிகளை முடித்துக்கொடுத்தார்.

மேலும் பந்துவீச்சில் 6.69 என்ற எகானமி உடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அவருடைய கட்டுக்கோப்பான பவுலிங் சிஎஸ்கேவில் இருக்கும் ஜடேஜாவிற்கான வெற்றிடத்தை நிரம்பும் ஒரு வீரராக பிரசாந்த் வீரை மாற்றியுள்ளது.

2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யவிருக்கும் 4 இளம்வீரர்கள்
’ஆல்டைம் கிரேட்டஸ்ட்’ இடதுகை TEST பவுலர்கள்.. டாப் 7-ல் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர்!

24 வயது இளம்வீரர்

கர்நாடகாவை சேர்ந்த 24 வயது ஸ்பின் ஆல்ரவுண்டரான மேக்னீல் நோரோன்ஹா ஹிட்டிங் திறமையால் சிஎஸ்கே அணியின் கவனம் பெறும் மற்றொரு ஆல்ரவுண்டராக மாறியுள்ளார்.

களத்தில் திடமாக நின்று வேடிக்கைக்காக சிக்சர் அடிக்கும் இவருடைய திறமையை பயன்படுத்திக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் விரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிகே நாயுடு டிராபியில் ஒரே சீசனில் 24 சிக்சர்களை விளாசியிருக்கும் வலது கை ஆஃப் ஸ்பின்னரான இவர் சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யவிருக்கும் 4 இளம்வீரர்கள்
1 விக்கெட் வீழ்த்தினால் வரலாறு.. முதல் இந்திய பவுலராக ’பும்ரா’ படைக்கவிருக்கும் சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஜடேஜா வெளியேறியதிலிருந்தே அகீல் ஹொசைன் என்ற பெயர் தான் அதிகளவில் பேசுபொருளாக இருந்துவருகிறது. ஜடேஜாவை போல அதே பவுலிங் ஆக்சனுடன் பந்துவீசும் அகீல் ஹொசைன், கடைசியில் வந்து பெரிய சிக்சர்களை அடிக்கக்கூடிய ஃபினிசிங் வீரராக பார்க்கப்படுகிறார்.

பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்தும் திறமையை கொண்டிருக்கும் இவர் சிஎஸ்கே அணியின் தேர்வாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுவருவதுகுறிப்பிடத்தக்கது.

இவர்கள் இல்லாமல் பேக்கப் ஓப்பனராக பிரித்வி ஷா, வேகப்பந்துவீச்சில் நார்ட்ஜே அல்லது மேட் ஹென்றி, பதிரானா, லிவிங்ஸ்டன், வெங்கடேஷ் ஐயர், ரவி பிஸ்னோய் அல்லது ராகுல் சாஹர் போன்ற வீரர்களுக்கும் சென்னை அணி முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யவிருக்கும் 4 இளம்வீரர்கள்
2026 ஐபிஎல் ஏலம்| ’கேமரூன் க்ரீன் முதல் கார்த்திக் சர்மா வரை..’ கவனம் ஈர்த்த வீரர்கள் பட்டியல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com