2026 WPL இறுதிப்போட்டி | டெல்லிக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு
2026 WPL இறுதிப்போட்டி | டெல்லிக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு தேர்வுweb

2026 WPL இறுதிப்போட்டி | டெல்லிக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு!

2026 WPL இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
Published on
Summary

2026 மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நட்சத்திர வீரர்கள் கொண்ட இவ்விரு அணிகளும் கோப்பைக்காக கடுமையாகப் போராடுகின்றன. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 4வது WPL கோப்பைக்காக மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, உபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 5 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், முதல் 5 போட்டிகளிலும் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.

ஸ்மிருதி மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஸ்மிருதி மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ்web

எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்த டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து வது முறையாக தகுதிபெற்று அசத்தியது.

இந்தசூழலில் கோப்பை யாருக்கு என்ற ஹை-லெவல் போட்டியில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2026 WPL இறுதிப்போட்டி | டெல்லிக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு
‘சின்ன பசங்க கிட்ட கூட அரசியல புகுத்துறாங்க..?’ பாகிஸ்தான் கிரிக்கெட்டை விமர்சித்த அஸ்வின்!

ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு..

ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இரண்டு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருக்கும் நிலையில், யாருக்கு கோப்பை செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது.

இந்நிலையில் வதோதராவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவிருக்கிறது.

ஆர்சிபி - ஸ்மிருதி
ஆர்சிபி - ஸ்மிருதி

டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் (விளையாடும் லெவன்): லிசெல் லீ (கீப்பர்), ஷஃபாலி வெர்மா, லாரா வால்வார்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (கேப்டன்), மாரிசேன் காப், சினெல்லே ஹென்றி, நிகி பிரசாத், சினே ராணா, மின்னு மணி, ஸ்ரீ சரணி, நந்தனி ஷர்மா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் (விளையாடும் லெவன்): கிரேஸ் ஹாரிஸ், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஜார்ஜியா வோல், ரிச்சா கோஷ்(கீப்பர்), ராதா யாதவ், நாடின் டி கிளர்க், பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, சயாலி சத்கரே, ஷ்ரேயங்கா பாட்டீல், லாரன் பெல்

2026 WPL இறுதிப்போட்டி | டெல்லிக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு
டெல்லியா OR ஆர்சிபியா..? இரண்டு தோழிகளுக்கு இடையே நிகழும் போர்.. கோப்பை யாருக்கு? பலம்-பலவீனம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com