\
india pakistan
india pakistanai

2026 மகளிர் ஆசிய கோப்பை| இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

2026 மகளிர் ஆசியக்கோப்பைக்கான இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
Published on
Summary

2026 மகளிர் ஆசிய கோப்பையில் இன்று நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், யுஏஇ, தாய்லாந்து, ஹாங் ஹாங்-சீனா, இந்தோனேசியா முதலிய 8 அணிகள் அடங்கிய மகளிர் ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்டு 28ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இன்று நடக்கவிருக்கும் 9வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. விளையாடியிருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இந்தியா, அடுத்தசுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்றால் அந்த அணியும் அடுத்தசுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் ஆட்டம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மிருதி மந்தனா சிறந்த ஃபார்மில் இருந்துவருவதால் இன்றைய போட்டியில் அவருடைய பேட்டிங் மீது எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

india pakistan
உங்களுக்காக என்ன செய்துவிட்டார் தோனி? Raina பதிலால் நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com