உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் டி20 லீக் |அடுத்தாண்டு சீசனுக்கான அட்டவணை வெளியீடு!
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரின் முதல் பதிப்பானது நடப்பாண்டு 2024 ஜூலை 3ம் தேதி முதல் நடைபெற்றது. அதில் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் முதலிய 6 அணிகள் பங்கேற்றனர்.
இந்த தொடரில் சுரேஷ் ரெய்னா, டேல் ஸ்டெய்ன், ஹர்பஜன் சிங், யூசுப் பதான், கெவின் பீட்டர்சன், பென் கட்டிங், ஷான் மார்ஷ், இம்ரான் தாஹிர், ஷாகித் அப்ரிடி, யுவராஜ் சிங், ஆரோன் பின்ச் மற்றும் பிரட் லீ உள்ளிட்ட பல முன்னாள் சாம்பியன் வீரர்கள் பங்கேற்று தங்களுடைய திறமையை மீட்டு எடுத்துவந்தனர்.
பரபரப்பாக நடைபெற்ற 2024 லெஜெண்ட்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் யூசுப் பதான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணியு கோப்பையை வென்று மகுடம் சூடியது.
இந்நிலையில் இத்தொடருக்கான இரண்டாவது பதிப்பானது அடுத்தாண்டு ஜுலை முதல் தொடங்கும் என்றும், அதற்கான போட்டி அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லெஜெண்ட்ஸ் லீக் இரண்டாவது சீசனுக்கான அட்டவணை அறிவிப்பு..
2025 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடரானது ஜுலை 18 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறவிருக்கிறது. இந்தியா லெஜெண்ட்ஸ், பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் அணிகள் ஜுலை 20ம் தேதி மோதவிருக்கின்றன. அரையிறுதிப்போட்டிகள் ஜுலை 31ம் தேதியும், இறுதிப்போட்டி ஆகஸ்ட் 2ம் தேதியும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
லீக் போட்டிகள்:
ஜூலை 18 : இங்கிலாந்து சாம்பியன்ஸ் vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ்
ஜூலை 19 : வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் vs தென் ஆப்ரிக்கா சாம்பியன்ஸ்
ஜூலை 19 : இங்கிலாந்து சாம்பியன்ஸ் vs ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ்
ஜூலை 20 : இந்தியா சாம்பியன்ஸ் vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ்
ஜூலை 22 : இங்கிலாந்து சாம்பியன்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்
ஜூலை 22 : இந்தியா சாம்பியன்ஸ் vs தென் ஆப்ரிக்கா சாம்பியன்ஸ்
ஜூலை 23 : ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்
ஜூலை 24 : தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் vs இங்கிலாந்து சாம்பியன்ஸ்
ஜூலை 25 : பாகிஸ்தான் சாம்பியன்ஸ் vs தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ்
ஜூலை 26 : இந்தியா சாம்பியன்ஸ் vs ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ்
ஜூலை 26 : பாகிஸ்தான் சாம்பியன்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்
ஜூலை 27 : தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் vs ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ்
ஜூலை 27 : இந்தியா சாம்பியன்ஸ் vs இங்கிலாந்து சாம்பியன்ஸ்
ஜூலை 29 : ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ்
ஜூலை 29 : இந்தியா சாம்பியன்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்
நாக் அவுட் போட்டிகள்:
ஜூலை 31 : அரையிறுதி 1 - SF1 vs SF4 (எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியம், பர்மிங்காம்)
ஜூலை 31 : அரையிறுதி 2 – SF2 vs SF3 (எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியம், பர்மிங்காம்)
ஆகஸ்ட் 2 : இறுதி (எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியம், பர்மிங்காம்)