’கோப்பையை எடுத்து வைங்க..’ ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு.. இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா!
2025 மகளிர் உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இந்திய மகளிர் அணி..
2025 மகளிர் உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா முதலிய 4 அணிகள் தகுதிபெற்றன.
முதல் அரையிறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது..
இந்நிலையில் இன்று நவி மும்பையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தோல்வியே காணாமல் இருந்துவந்த ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஃபைனலுக்கு சென்று அசத்தியுள்ளது இந்திய அணி..
ஃபைனலுக்கு தகுதி பெற்றது இந்தியா..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 119 ரன்கள், எல்லிஸ் பெர்ரி 77 ரன்கள், ஆஷ்லீ கார்ட்னர் 63 ரன்கள் அடித்து அசத்த 50 ஓவரில் ஆஸ்திரேலியா 338 ரன்கள் குவித்தது..
இந்தசூழலில் 339 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் 89 ரன்கள் அடித்து அசத்த, இறுதிவரை களத்திலிருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127* ரன்கள் அடித்து இந்தியாவை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார்..
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கான 339 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இந்திய அணி..

