CEAT Awards| லாராவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. ரோகித், ஜோ ரூட், ஸ்மிருதிக்கு விருதுகள்!
2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் பிரையன் லாராவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
27-வது CEAT கிரிக்கெட் மதிப்பீட்டு விருதுகள் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் உலக கிரிக்கெட் வீரர்களின் திறமைக்கு மதிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் பிரையன் லாராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதே நேரத்தில் ரோகித் சர்மாவுக்கு சிறப்பு நினைவுப் பரிசும், ஜோ ரூட்டுக்கு ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதும் வழங்கப்பட்டது.
இதில் கவனிக்கும்படியாக சஞ்சு சாம்சன், வருண் சக்கரவர்த்தி, ரகுவன்ஷி, ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா போன்ற இந்திய வீரர்களும் தங்களுடைய திறமைக்கான விருதை வென்றனர்.
யாருக்கு என்ன விருதுகள்..?
பிரையன் லாரா - வாழ்நாள் சாதனையாளர் விருது
ரோகித் சர்மா - சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்காக சிறப்பு நினைவு பரிசு
ஜோ ரூட் - 2025-ம் ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் வீரர்
சஞ்சு சாம்சன் - ஆண்டின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்
வருண் சக்கரவர்த்தி - ஆண்டின் சிறந்த டி20 பவுலர்
ஸ்ரேயாஸ் ஐயர் - CEAT ஜியோஸ்டார் விருது
கேன் வில்லியம்சன் - ஆண்டின் சிறந்த ODI பேட்ஸ்மேன்
மேட் ஹென்றி - ஆண்டின் சிறந்த ODI பவுலர்
பி.எஸ்.சந்திரசேகர் - CEAT வாழ்நாள் சாதனையாளர் விருது
ஸ்மிருதி மந்தனா - ஆண்டின் சிறந்த மகளிர் பேட்டர்
தீப்தி சர்மா - ஆண்டின் சிறந்த மகளிர் பவுலர்
அங்கிரிஷ் ரகுவன்ஷி - ஆண்டின் வளர்ந்து வரும் வீரர்
டெம்பா பவுமா - சிறந்த கேப்டன்ஷி-க்கான விருது
பிரபாத் ஜெயசூர்யா - ஆண்டின் சிறந்த டெஸ்ட் பவுலர்
ஹாரி ப்ரூக் - ஆண்டின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்
ஹார்ஷ் துபே - ஆண்டின் சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் வீரர்