
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 5000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் படைத்துள்ளார்.
பாபர் அசாம் இந்தச் சாதனையை 97 இன்னிங்ஸில் எடுத்ததோடு தென்னாப்பிரிக்காவின் ஹசீம் ஆம்லா, இந்தியாவின் விராட் கோலி ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. ஏற்கெனவே முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்று 4ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் நேற்று 107 ரன்கள் எடுத்து அசத்தினார். அப்போது தன்னுடைய 97 ஆவது இன்னிங்ஸில் 5000 ரன்களை விரைவாக எட்டி ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 101 இன்னிங்ஸில் 5 ஆயிரம் ரன்களை எட்டி ஹசிம் ஆம்லாவின் சாதனையை இதன் மூலம் முறியடித்தார் பாபர் அசாம்.
குறிப்பாக விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலி ஆகியோரையும் மிஞ்சிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 இன்னிங்ஸ்களுக்குள் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்தார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 18 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையும் பாபர் அசாம் (97 இன்னிங்ஸ்) படைத்தார்.
அதேபோலஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களுக்கு மேல் குவித்த 14வது பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம். அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக் தான், பாகிஸ்தான் சார்பில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதன்படி, அவர் ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரத்து 701 ரன்களை குவித்துள்ளார். இப்போதே உலகத்தரமான பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பாபர் அசாம், இனி வரும் காலங்களில் பல்வேறு சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.