FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ்.. வரலாற்றில் முதல்முறை.. Finalலில் இந்திய வீராங்கனைகள்!
ஜார்ஜியாவில் FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனையான திவ்யா தேஷ்முக்கும் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், மற்றொரு இந்திய வீராங்கனையான கோனேரு ஹம்பியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், மகளிா் உலகக் கோப்பை செஸ் வரலாற்றில், இந்த முறை இரு இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் திவ்யாவும், கோனெரு ஹம்பியும் தகுதிபெற்று அசத்தியுள்ளனா். தனது அரையிறுதியில் சீனாவின் டிங்ஜி லெய்யை எதிா்கொண்டாா்.
இப்போட்டி டிரா (1-1) ஆனதால், டை-பிரேக்கா் முறை கையாளப்பட்டது. அந்த டை பிரேக்கா் ஆட்டடமும் டிரா ஆக, ஆட்டம் மீண்டும் 2-2 என சமநிலை கண்டது. தொடா்ந்து நடைபெற்ற 2-ஆவது டை-பிரேக்கரில் முதல் சுற்றில் டிங்ஜி லெய் வெல்ல, 2-ஆவது சுற்றில் கோனெரு ஹம்பி வென்றாா். இதனால் ஆட்டம் 3-3 என மீண்டும் சமனானது. இந்நிலையில், 3-ஆவது டை பிரேக்கரில் கோனெரு ஹம்பி இரு சுற்றுகளிலும் வெல்ல, அவா் 5-3 என்ற கணக்கில் டிங்ஜி லெய்யைவீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினாா். இறுதிப் போட்டி ஜூலை 26 மற்றும் 27ஆம் தேதிகளில் நடக்கும். தேவைப்பட்டால் ஜூலை 28ஆம் தேதி டைபிரேக்குகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் மோத இருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.