FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீராங்கனை வைஷாலி

FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் இந்திய வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார்

FIDE கிராண்ட் ஸ்விஸ் தொடர் பிரிட்டனில் நடைபெற்றது. மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதி சுற்றில் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குதுலை, வைஷாலி எதிர்கொண்டார்.

Vaishali R
Vaishali RTwitter

இந்த போட்டி டிராவில் முடிவுற்றது. எனினும் இத்தொடரில் அதிக புள்ளிகள் பெற்றவர் என்ற முறையில் சாம்பியன் பட்டத்தை வைஷாலி கைப்பற்றினார்.

மேலும் சுமார் 20 லட்சம் ரூபாயையும் அவர் பரிசுத் தொகையாக வென்றார். இவ்வெற்றி மூலம் அடுத்தாண்டு கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் CANDIDATE தொடரில் விளையாடவும் வைஷாலி தேர்வாகி உள்ளார்.

ஏற்கெனவே ஆண்கள் பிரிவில் உலக கோப்பையில் வெள்ளிபதக்கம் வென்றது மூலம் அவரது சகோதரர் பிரக்ஞானந்தா CANDIDATE தொடருக்கு தேர்வாகிய நிலையில் தற்போது அக்கா வைஷாலி மகளிர் பிரிவில் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வைஷாலி நெருங்கி வருகிறார்.

Vaishali with her mom and brother
பக்கபலமாய் அம்மா... வெற்றிகளை வாரிக்குவிக்கும் பிரக்ஞானந்தா!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com