\
விஜய், பிரக்ஞானந்தா
விஜய், பிரக்ஞானந்தாweb

”கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா..” நார்வே செஸ் சாம்பியன் ஆனதற்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, இச்சாதனையை படைத்த முதல் இந்தியர் என்ற வரலாற்றையும் தமிழகத்தின் 20 வயது பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
Published on
Summary

நார்வே செஸ் 2026 தொடரில் உலக நம்பர் 1 மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்தி, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை இறுதியில் தோற்கடித்து, 20 வயதில் நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியராக வரலாறு படைத்துள்ளார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. இந்த மாபெரும் சாதனைக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வேயில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை 2 முறை தொடர்ச்சியாக வீழ்த்தி மிரட்டிய பிறகு, இறுதிப்போட்டியிலும் வென்று மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியன் டி. குகேஷ், அலிரேசா ஃபிரூஜா, வெஸ்லி சோ மற்றும் கெய்மர் என பல சவால் கொடுக்கக்கூடிய சாம்பியன் வீரர்கள் இருந்தபோதிலும், தொடர்ந்து 4 கிளாசிக்கல் போட்டிகளில் வென்று மகுடம் சூடியுள்ளார் பிரக்ஞானந்தா. அதிலும் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பர் 1 வீரருமான கார்ல்சனை 2 முறை தோற்கடித்தது இத்தொடரில் பிரக்ஞானந்தாவின் முத்திரை வெற்றியாகும்.

இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி பட்டத்தை உறுதிசெய்த அவர், மதிப்புமிக்க நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியராக வரலாறு படைத்துள்ளார்.

விஜய், பிரக்ஞானந்தா
20 வயதில் முதல் இந்தியராக வரலாறு.. பிரக்ஞானந்தா படைத்த மாபெரும் சாதனை!

முதல்வர் விஜய் வாழ்த்து..

செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகளை பகிர்ந்திருக்கும் முதல்வர் விஜய், “நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்” என பாராட்டியுள்ளார்.

விஜய், பிரக்ஞானந்தா
இது இந்திய அணியா? GT அணியா? கில் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com