விராத் கோலி ஆப்சென்டால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வருத்தம்: பிசிசிஐ காட்டம்!

விராத் கோலி ஆப்சென்டால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வருத்தம்: பிசிசிஐ காட்டம்!
விராத் கோலி ஆப்சென்டால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வருத்தம்: பிசிசிஐ காட்டம்!

இந்திய கிரிக்கெட் அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற வேண்டும் என்பதை போட்டியை ஒளிபரப்பும் நிறுவனமோ அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலோ முடிவு செய்ய முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் காட்டமாகத் தெரிவித்துள்ளது. 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியும் இரண்டாவது லீக் போட்டியும் பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன. இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணியில், கேப்டன் விராத் கோலி இடம்பெறவில்லை. இங்கிலாந்தில் நடந்த நீண்ட தொடரில் அவர் பங்கேற்றார். அங்கு நடந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவரும் அவர்தான். அவர் 593 ரன்கள் குவித்தார். 84 நாட்கள் அவர் அந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றதால் ஆசியக் கோப்பை தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்த தொடரில் பங்கேற்காத தற்கு ஆசியக் கோப்பை கிரிக்கெட் கவுன்சில் அதிருப்தியை தெரிவித்திருந்தது. உலகின் முன்னணி பேட்ஸ்மேனான விராத் கோலி இல்லாத தால் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்று அதிருப்தியை வெளியிட்டி ருந்தது. 

இது தொடர்பாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் கவுன்சிலின் விளையாட்டு மேம்பாட்டு மேலாளர் துசித் பெரேராவுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறு வனம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘எங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தந்தில் சிறந்த வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் சிறந்த வீரரான விராத் கோலி இந்த தொடரில் பங்கேற்காமல் இருப்பதை, போட்டி தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னால்தான் அறிவித்துள்ளனர். அவர் இல்லாததால் இந்தப் போட்டியின் மூலம் எங்களுக்கு கிடைக்கும் வருமானம் பாதிக்கும்’ என்று கூறியிருந்தது.

இதற்கு காட்டமாக பதிலளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிஇஓ ராகுல் ஜோரி,  வீரர்களை தேர்வு செய்வது இந்திய கிரிக்கெட் வாரிய குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலோ, ஒளிபரப்பு நிறுவனமோ தலையிட முடியாது. எங்கள் தேர்வுக் குழு சிறந்த அணியை தேர்வு செய்து அனுப்பியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com