\
Bhaskaran Questions Tamil Nadu's Decline in Women's Hockey
ஹாக்கிPt web

மகளிர் ஹாக்கியில் பின்தங்கிய தமிழ்நாடு; மண் தரையில் விளையாடும் வீராங்கனைகள் - முன்னாள் கேப்டன் சாடல்

அரசு, விளையாட்டு அமைப்புகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழக வீராங்கனைகள் மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியும்.
Published on

இந்திய மகளிர் ஹாக்கி அணியில் கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு வீராங்கனைகள் இடம்பிடிக்காத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹரியாணா, ஒடிஷா, பஞ்சாப், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் தேசிய அணிக்குத் தொடர்ந்து வீராங்கனைகளை உருவாக்கி வரும் வேளையில், தமிழ்நாடு இதில் பின்தங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் கேப்டன் பாஸ்கரன்
முன்னாள் கேப்டன் பாஸ்கரன் X

இது குறித்துப் பேசிய இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன், 'தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டர்ஃப் எனப்படும் செயற்கை இழை மைதானங்களும், பெண்களுக்கான விடுதிகளும் செயல்பட்டுவருகின்றன. ஆனால், வீராங்கனைகள் நவீன மைதானங்களில் விளையாடாமல், இன்னும் மண் தரையிலும் புல்வெளியிலும் மட்டுமே விளையாடி வருகின்றனர்' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா, ஜார்கண்ட் மாநிலங்களில் 10 வயது முதலே வீராங்கனைகள் நவீன மைதானங்களில் பயிற்சி பெறுவதே அவர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க முதன்மைக் காரணமாக அமைகிறது. தமிழ்நாட்டு அரசும் விளையாட்டு அமைப்புகளும் ஒருங்கிணைந்து, மாவட்ட அளவில் லீக் போட்டிகள் நடத்தி, நவீன அகாடமிகளை உருவாக்கினால் மட்டுமே தமிழக வீராங்கனைகள் மீண்டும் இந்திய அணியில் தடம் பதிக்க முடியும் என விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Bhaskaran Questions Tamil Nadu's Decline in Women's Hockey
முதல் போட்டியிலேயே திணறிய பிரேசில்: நெய்மாருக்கு என்ன ஆனது.? நூற்றாண்டு சாதனையை தக்க வைத்த பிரேசில்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com