'உங்களுக்கு வேறு வழியே இல்லை'.. பணிந்து வந்த வங்கதேசம்.. இந்தியாவிற்கு வரும் வங்கதேச அணி!
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பதற்றம் அதிகரித்தது. இதனால், வங்கதேச கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க வங்கதேசம் அனுமதி பெற்றது. இதனால், வங்கதேசம் இந்தியாவிற்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது மட்டுமின்றி அங்குள்ள இந்து சமூக மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.. அதே சமயம் அந்நாட்டு தூதரை அழைத்து எச்சரிக்கையும் விடுத்திருந்தது.. இதனால் இந்தியா வங்கதேசம் இடையே பதற்றம் அதிகரித்து வருவது மட்டுமின்றி இரு நாட்டுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது..
இதன் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மானின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சிடைந்த வங்கதேச அணி இந்தியாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடமாட்டோம் என்றும் தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தது.. வங்கதேசத்தின் கோரிக்கைக்கு பாகிஸ்தானை தவிர வேறு எந்த நாடும் ஆதரவு தெரிவிக்காததால் வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.. வங்கதேசம் இறங்கிவராத நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வங்கதேச அணி நீக்கப்பட்டு ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.
இந்தியாவிற்கு வரும் வங்கதேசம்..
இதற்கிடையில், ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.. இந்தப் போட்டியில் பங்கேற்க துப்பாக்கிச் சுடுதல் குழுவுக்கு வங்கதேசம் அனுமதி அளித்துள்ளது..
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதில் வங்கதேசம் முரண்பாடு காட்டியதால் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டது.. துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் முரண்பாடு காட்டினால் இந்தப் போட்டியிலும் நீக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் பணிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வங்கதேச விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்துள்ள விளக்கத்தில், "வங்கதேச அணியில் ஒரு பயிற்சியாளர், ஒரு வீரர் மட்டுமே உள்ளார்கள் என்றும் அவர்கள் இருவரும் பாதுகாக்கப்பட்ட உள்ளரங்கில் விளையாடுவதால் எந்த பாதிப்பும் இருக்காது என்பதால் அனுமதி அளித்தோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு டி20 உலகக்கோப்பையிலும் வந்து விளையாடி இருக்கலாமே என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

