\
Ban for Argentine players? Shocking background details revealed.
Ban for Argentine playersLas malvinas islands

அர்ஜென்டினா வீரர்களுக்கு தடை.? வெளிவந்த அதிர்ச்சி பின்னணி.. என்ன செய்யப்போகிறது FIFA !

அர்ஜென்டினா வீரர்களை பிரிட்டனுக்குள் அனுமதிக்க கூடாது என அந்நாட்டின் வலதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Published on

ஃபிபா உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்ற பின்னர் லாஸ் மால்வினாஸ் (las malvinas) தீவுகள் அர்ஜென்டினாவுக்கே சொந்தம் என எழுதப்பட்ட பதாகையை அர்ஜென்டினா வீரர்கள் சிலர் மைதானத்திலேயே தூக்கி காட்டினர்.

அர்ஜென்டினாவின் அருகில் உள்ள லாஸ் மால்வினாஸ் தீவுகள் தற்போது பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த தீவுகளை அர்ஜென்டினா நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அதோடு இதற்காக பிரிட்டன் மற்றும் அர்ஜென்டினா இடையே போரும் நடந்துள்ளது.

இந்த சூழலில் அர்ஜென்டினா வீரர்கள் செய்த செயல் பிரிட்டனில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா அணியின் முக்கிய வீரர்களான லிசாண்ட்ரோ மார்டினெஸ் (lisandro martínez), கிறிஸ்டியன் ரொமெரோ (Cristian Romero) மற்றும் என்சோ பெர்னாண்டஸ் (Enzo Fernández) ஆகியோர் இங்கிலாந்தின் முக்கிய கிளப் அணிகளுக்காக ஆடி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த அர்ஜென்டினா வீரர்களை பிரிட்டனுக்குள் அனுமதிக்க கூடாது என அந்நாட்டின் வலதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதோடு அர்ஜென்டினா வீரர்களை கிளப் அணியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனினும் கிளப் அணிகள் இதுபோன்ற செயல்களை செய்ய வாய்ப்பு இல்லை என்றே விளையாட்டு நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே அர்ஜென்டினா வீரர்களின் இந்த செயல் குறித்து ஃபிபா அமைப்பும் ஆய்வு செய்து வருவதாகவும், குறிப்பிட்ட சில அர்ஜென்டினா வீரர்களுக்கு சில போட்டிகளில் தடை மற்றும் அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Ban for Argentine players? Shocking background details revealed.
ஸ்பெயினின் உலகக்கோப்பை ஆயுதம் | சிறுவர்களை சாம்பியனாக்கிய கிளப்.. மெஸ்ஸி உருவானதும் இங்குதான்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com