ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை - முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை - முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை - முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் பிடித்துள்ளார். 891 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். 

அதே போல இந்தியாவின் ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் ஷர்மா 747 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோலஸ் எட்டாவது இடத்தில் உள்ளார். 

இவர்களை தவிர மார்னஸ் லபுஷேன், ஜோ ரூட், டேவிட் வார்னர், பாபர் அஸாம் ஆகியோர் புள்ளிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

பவுலர்களின் பட்டியலில் அஷ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆல் ரவுண்டர் பட்டியலில் அவருக்கு நான்காவது இடம். அதே போல ஜடேஜா ஆல் ரவுண்டர் பட்டியலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் ஐந்து பேரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவுக்காக களம் இறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com