\
vithya ramraj - ashwin
vithya ramraj - ashwinpti / Reliance Foundation event

“என் மகள்களுக்கு 100 தடவ..” வித்யா ராம்ராஜ் சாதனையை புகழ்ந்து பாராட்டிய அஸ்வின்!

ஆசிய விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச்சேர்ந்த வித்யா ராம்ராஜ் சாதனையை பாராட்டி பேசினார் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
Published on: 
Summary

ஆசிய விளையாட்டில் மூன்று பதக்கங்களை வென்று இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனையை படைத்த வித்யா ராம்ராஜின் திறமையை புகழ்ந்து, அவரது 400 மீட்டர் தடை ஓட்டத்தை 100 தடவ மகள்களுக்கு காட்டியதாக அஸ்வின் பெருமிதம் தெரிவித்தார்.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்று உலகின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார் கோவையைச் சேர்ந்த வித்யா ராமராஜ்.

பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதிப்போட்டியில், பந்தய தூரத்தை வெறும் 54.75 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா, இந்திய தடகள ஜாம்பவான் பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால (55.42 விநாடிகள்) சாதனையை கடந்து புதிய வரலாறு படைத்தார்.

மேலும், 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும், ஏற்கெனவே கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் வித்யா இடம்பெற்று அசத்தினார்.

இந்தசூழலில் அவருடைய அசாதாரண சாதனையை புகழ்ந்து பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “உண்மையை சொல்றன், வித்யா ராம்ராஜோட 400 மீட்டர் கடைசி நிமிட ஓட்டத்தை பார்க்கசொல்லி என் பொண்ணுங்களுக்கு 100 தடவ காட்டியிருப்பன். அவங்க கடைசில முதல்ல ஓடின வீராங்கனைய கிராஸ் பண்ணி ஓடும்போது பிரம்மிப்பா இருந்தது. சிலருக்கு அவங்க பண்ணியிருக்குறத புரிஞ்சிக்க முடியாது. நாங்க ட்ரெய்னிங்கிற்காக 100 மீட்டர், 400*2 மீட்டர்லாம் ஓடுவோம், கடைசில அந்த 100மீட்டர், 200 மீட்டர்லாம் கடக்கும்போது நாக்கு தள்ளிரும். வித்யா ஓடுவதை பார்க்கும்போது அற்புதமாக இருந்தது, ரொம்ப பெருமையா இருக்கு. ஆசிய விளையாட்டுல பங்கேற்ற எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள்” என பேசியுள்ளார்.

vithya ramraj - ashwin
Argentina ஜெர்சியில் கடைசி போட்டி.. நாளை விடைபெறுகிறார் 'மெஸ்ஸி'.. எப்போது, எங்கு LIVE பார்க்கலாம்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com