\
பாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற தோனிக்கு அனுமதி

பாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற தோனிக்கு அனுமதி

பாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற தோனிக்கு அனுமதி
Published on

இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற, கிரிக்கெட் வீரர் தோனிக்கு  ராணுவ தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். அவ்வப்போது ராணுவ வீரர்களுடன் உரையாடும் தோனி, ராணுவ குழுவுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்ததார். இதனால் இந்திய கிரிக்கெட் அணியின், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று அவர் கூறியிருந்தார். 

இதனையடுத்து இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற ராணுவ தளபதி பிபின் ராவத், தோனிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ராணுவ நடவடிக்கையில் பங்குபெற அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com