ஒரே ஆண்டில் சரிந்த அலிபாபா மற்றும் டென்சென்ட் நிறுவனங்களின் சந்தை மதிப்பு!

ஒரே ஆண்டில் சரிந்த அலிபாபா மற்றும் டென்சென்ட் நிறுவனங்களின் சந்தை மதிப்பு!
ஒரே ஆண்டில் சரிந்த அலிபாபா மற்றும் டென்சென்ட் நிறுவனங்களின் சந்தை மதிப்பு!

கடந்த 13 மாதங்களில் மட்டும் அலிபாபா மற்றும் டென்செனட் நிறுவனங்கள் தங்களது சந்தை மதிப்பில் சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதாக தகவல். இதனை Bloomberg  நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் கடந்த 2021 பிப்ரவரி முதலே சந்தை மதிப்பில் சரிவை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீன அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜியோமி கார்ப்பரேஷன் சுமார் 56.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை சந்தை மதிப்பில் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் சந்தை மதிப்பை இழந்த டாப் 10 சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. அலிபாபா மற்றும் டென்சென்ட் நிறுவனங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com