”அலி பாய் வலிமை அப்டேட்” - மைதானத்தில் மொயீன் அலியிடம் கேட்ட அஜித் ரசிகர் - வைரல் வீடியோ

”அலி பாய் வலிமை அப்டேட்” - மைதானத்தில் மொயீன் அலியிடம் கேட்ட அஜித் ரசிகர் - வைரல் வீடியோ
”அலி பாய் வலிமை அப்டேட்” - மைதானத்தில் மொயீன் அலியிடம் கேட்ட அஜித் ரசிகர் - வைரல் வீடியோ

சென்னை சேப்பாக்கத்தில் பீல்டிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மொயீன் அலியிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர் ஒருவரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ச்சியாக வரும் நிலையில் அஜித் நடித்த வலிமைப்படத்தின் அப்டேட் மட்டும் இன்னும் வந்தபாடில்லை. அதனால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வலிமை படம் அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். இதனிடையே அஜித்தின் மேலாளர் வலிமை படம் குறித்த அப்டேட் விரைவில் வரும் என அறிக்கை விட்டார். ஆனால் அப்டேட் என்னவோ இன்று வரை வரவில்லை.அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகவும் ட்விட்டரில் ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆயின.

இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்கு வந்த அஜித்தின் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு பதாகைகளுடன் வந்தனர். மேலும் விளையாட்டின் போது முழக்கமிட்டும் ரசிகர்கள் அப்டேட் கேட்டனர். அந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது இங்கிலாந்து வீரரிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “ இங்கிலாந்து வீரர் மொயீன் அலி பீல்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரை அலி பாய் என்று அழைத்த அஜித் ரசிகர் ஒருவர், வலிமை அப்டேட் என்கிறார். அதை கேட்ட மொயீன் அலி, ஏதுமரியாத பிள்ளை போல சிரிக்கிறார்.” இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com