இதனாலதான் ஸ்போர்ட்ஸுக்கு இவ்வளவு ரசிகர்கள்! ஒரே நாளில் பதிவான 3 நம்பமுடியாத வரலாற்று சம்பவங்கள்!

இன்று ஒரேநாளில் மட்டும் நம்பவே முடியாத இடத்திலிருந்து 3 மிகப்பெரிய வெற்றியை விளையாட்டு உலகம் சந்தித்திருக்கிறது.
best sport moments
best sport momentsX

கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், பேட்மிண்டன், ஹாக்கி என ஒவ்வொரு உலகளாவிய விளையாட்டுக்கும் அதிதீவிரமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். பல்லாயிரம் மைல்கள் கடந்து ஒரு போட்டியை காண செல்வதும், ஒரு வீரரின் ஆட்டத்தை காண மழை, வெய்யில் எதையும் பொருட்படுத்தாமல் தெருவில் படுத்திருந்து காத்திருந்து பார்த்து சிலாகிப்பதும், தன்னுடைய நாடு முக்கியமான கோப்பையை வெல்லாத போது விரக்தியில் உயிரை விடுவதும் என தன்னுடைய வாழ்வின் ஒருபகுதியாக விளையாட்டை வைத்திருக்கும் ரசிகர்கள் இங்கு ஏராளம்.

அந்தவகையில் இன்று ஒரே நாளில் பதிவான 3 சம்பவங்கள், விளையாட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த சுவாரசியத்தையும் கொடுத்துள்ளது. ஆஸ்திரேலியா ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் 2-0 என பின்தங்கிய நிலையிலிருந்து கிராண்ட்ஸ்லாம் வென்றது, 56 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய மண்ணில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி என 3 தரமான சம்பவங்கள் நம்பவே முடியாத விதமாக அரங்கேறியுள்ளது.

48 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முதல் இத்தாலிய வீரர்!

2024 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியானது, டேனில் மெத்வதேவ் மற்றும் ஜானிக் சின்னர் இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்றது. 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த மெத்வதேவ் முதல் இரண்டு செட்களையும் 6-3, 6-3 என கைப்பற்றியிருந்தார். 3வது செட்டும் 4-4 (40, 40) புள்ளிகள் என எட்டிப்பிடிக்கும் இடத்திலேயே இருந்தது.

ஆனால் நம்பவே முடியாத வகையில் 2-0 என முதல் இரண்டு செட்களை இழந்திருந்த ஜானிக் சின்னர், எஞ்சியிருந்த 3 செட்களையும் கைப்பற்றி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 22 வயது ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியா ஒபனை வெல்லும் முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையையும், 48 ஆண்டுகளில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் இத்தாலிய வீரர் சாதனையையும் படைத்தார். தோல்வியின் விளிம்பிலிருந்து சின்னர் மீண்டெழுந்தது நம்பமுடியாத ஒன்றாக இருந்தது.

56 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்திய WI!

ஆஸ்திரேலியாவின் கோட்டை என கருதப்படும் கப்பா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா வெற்றிபெற 45 ரன்களே தேவை என்ற இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 4 விக்கெட்டுகள் தேவை என்ற இடத்திலும் போட்டியிருந்தது. ஆனால் ஒரு நம்பமுடியாத பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் ஷமர் ஜோசப் ஆஸ்திரேலியாவின் 3 விக்கெட்டுகளை விரைவாகவே சாய்த்தார்.

போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 25 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 1 விக்கெட்டும் என தலைகீழாக மாறியது. ஆனால் 91 ரன்களுடன் களத்திலிருந்த ஸ்டீவ் ஸ்மித் முக்கியமான நேரத்தில் சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்டு வெற்றிக்கு தேவையாக 10 ரன்களுக்கு எடுத்துவந்தார். ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் களத்திலிருக்கும் வரை ஆஸ்திரேலியாவுக்கே வெற்றி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கிடைத்த ஒரே வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஷமர் ஜோசப் கடைசி பேட்ஸ்மேனான ஹசல்வுட்டை வெளியேற்றி வெஸ்ட் இண்டீஸுக்கு ஒரு வரலாற்று வெற்றியை தேடித்தந்தார்.

27 வருடங்களாக ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்த முடியாமல் இருந்துவந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. அதேபோல 1968ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக கப்பாவில் வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தனிவரலாறு படைத்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. 8 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது நம்ப முடியாத ஒன்றாக அமைந்தது.

best sport moments
“இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி தலைநிமிர்ந்து விட்டது”!- வரலாற்று வெற்றிக்கு பின் கண்ணீருடன் பேசிய லாரா!

முதல்முறையாக மோசமாக தோற்ற இந்தியா!

இந்திய மண்ணில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோற்ற நிகழ்வு முதல்முறையாக அரங்கேறியது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை வகித்த இந்திய அணிக்கு, 231 ரன்களை வெற்றி இலக்காக இரண்டாவது இன்னிங்ஸில் நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.

இந்தியா வெற்றிபெற 55 ரன்கள் தேவையும், இங்கிலாந்து வெற்றிபெற 3 விக்கெட்டுகள் தேவையும் இருந்த போது களத்தில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இருந்தனர். இந்திய அணிக்கு எல்லாம் கைக்கூடி வந்த நேரத்தில் திடீரென எல்லாம் தலைகீழாக மாறியது. முடிவில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஒரு வரலாற்று தோல்வியை சந்தித்தது. அறிமுக போட்டியில் விளையாடிய ஒரு இங்கிலாந்து ஸ்பின்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவை தோற்கடித்தது நம்ப முடியாத நிகழ்வாக அமைந்தது.

best sport moments
3 நாள் வரை இந்தியா கையிலிருந்த ஆட்டம்! ஒரே நாளில் திருப்பிய போப்-ஹார்ட்லி! 28 ரன்னில் ENG வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com