இந்த ராசியினருக்கு எதிர்பார்த்த அரசு உதவி கிடைக்குமாம்.. இன்றைய ராசிபலன்கள்.. (ஜூலை17, 2025)
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே! சுபகாரியம் சார்ந்த செயல்களில் காலதாமதம் உண்டாகும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் அசதியினால் வேலையில் ஆர்வமின்மை ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே ! குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். விற்பனை பிரிவில் ஆதாயம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே ! தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தொண்டையில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.
கடகம்
கடக ராசி அன்பர்களே! உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் ஆடம்பரமான விஷயங்களால் குழப்பங்கள் ஏற்படும். நம்பிக்கையை உருவாக்கும். சாந்தம் நிறைந்த நாள்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே! சகோதர, சகோதரிகளுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனை சார்ந்த விஷயங்களால் லாபங்கள் மேம்படும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். புதிய கருவிகள் வாங்கும் செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். பகை விலகும் நாள்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே!தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். வியாபார விஷயங்களில் ஒத்துழைப்புகள் மேம்படும். மறதி குறையும் நாள்.
துலாம்
துலா ராசி அன்பர்களே!சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். வெளியூர் பயண சிந்தனைகள் அதிகாரிக்கும். மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே! பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். உயர் அதிகாரிகளை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். வேலையாட்களால் சிறு அலைச்சல்கள் உண்டாகும். சொத்து பிரச்சனைகளில் பொறுமையை கையாள்வது நல்லது. அரசு காரியங்களில் சில விரயங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்
தனுசு
தனுசு ராசி அன்பர்களே!தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். செலவு விஷயங்களை திட்டமிட்டு செயல்படுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
மகரம்
மகர ராசி அன்பர்களே! உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதளவில் இருந்த இறுக்கங்கள் குறையும். நறுமண பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். தொழில் நிமித்தமான நட்பு வட்டம் விரிவடையும். அரசு சார்ந்த சில உதவிகள் சாதாகமாகும். அமைதி நிறைந்த நாள்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே! உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். தாய்மாமன் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முதலீடுகள் மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.
மீனம்
மீன ராசி அன்பர்களே! உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குறுகிய கால கடன் பிரச்னைகள் குறையும். தடைபட்ட முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் கவலைகள் மனதில் இருந்து விலகும். எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். கலைத்துறைகளில் நல்வாய்ப்புகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
நல்ல நேரம்
மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 1 ந் தேதி வியாழக்கிழமை மாலை 6:33 வரை சப்தமி திதி பிறகு அஷ்டமி திதி. இன்று அதிகாலை 4: 48 மணி முதல் ரேவதி நட்சத்திரம். ராகு காலம் காலை 6 மணி முதல் 7:30 மணி வரை. எமகண்டம் மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை. குளிகை காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம் காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை சூலம் தெற்கு. நாள் முழுவதும் சித்த யோகம் சந்திராஷ்டமம் பூரம் நட்சத்திரம்.