ஜூலை 25, 2025 | இந்த ராசிக்கு இன்று எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்... இன்றைய ராசிபலன்கள்..!
மேஷம்
மேஷம் ராசி அன்பர்களே! வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்து தடைகள் விலகும். கணவன் மனைவி இடையே இருக்கும் அதிகரிக்கும். சோர்வு மறையும் நாள்.
ரிஷபம்
ரிஷபம் ராசி அன்பர்களே! கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பகை விலகும் நாள்.
மிதுனம்
மிதுனம் ராசி அன்பர்களே! உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். நினைத்த சில பணிகளை அலைச்சல்கள் ஏற்படும். சில நினைவுகளால் ஒரு விதமான இறுக்கங்கள் உண்டாகும். வியாபாரம் முதலீடுகளில் கவனம் வேண்டும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். மறைமுகமான சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.
கடகம்
கடகம் ராசி அன்பர்களே! பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்கள் மேம்படும். அலுவல் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். பெருமைமிக்க நாள்
சிம்மம்
சிம்மம் ராசி அன்பர்களே! முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக குறையும். பணி புரியும் இடத்தில் திறமைகள் வெளிப்படும். நட்பு மேம்படும் நாள்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே! வெளியூர் வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். உலகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு செயல்களில் இருந்த இழுபறிகள் குறையும். உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உழைப்புகள் உண்டான மதிப்புகள் கிடைக்கும். மாமியார் உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். சமூக பணிகளில் ஆதாயம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்
துலாம்
துலாம் ராசி அன்பர்களே! எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கணவன்–மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களின் அறிமுகம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
விருச்சிகம்
விருச்சிகம் - ராசி அன்பர்களே! நினைத்த காரியத்தை முடிப்பதில் தாமதம் ஏற்படும். குழந்தைகளிடம் அனுசரித்து செல்லவும். சில உதவிகள் கிடைப்பதில் இழுபறிகள் ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பாராத சில இடமாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சுமுகமற்ற சூழல்கள் அமையும். அலுவல் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
தனுசு
தனுசு - ராசி அன்பர்களே! வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
மகரம்
மகரம் ராசி அன்பர்களே! திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். வழக்குகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.
கும்பம்
கும்பம் ராசி அன்பர்களே! மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பெரியவர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். சில பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.
மீனம்
மீனம் - ராசி அன்பர்களே! வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படு நறுமண பொருட்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.
25:7:2025. மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 9 ந் தேதி வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சுக்ல பிரதமை திதி 1. நட்சத்திரம்: இன்று மாலை 5:57 மணி வரை பூசம் பிறகு ஆயில்யம்
2. ராகு காலம் : காலை 10:30 மணி முதல் 12 மணி வரை.
3. எமகண்டம் மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை.
4. குளிகை காலை 7:30மணி முதல்9 மணி வரை
5. நல்ல நேரம்: காலை9 :15 மணி முதல் 10:15மணி வரை
6. சூலம் : மேற்கு
7. யோகம் : காலை 6 மணி மரணயோகம் யோகம்
8. சந்திராஷ்டமம் : மாலை 5:57 மணி வரை மூலம் பிறகு பூராடம்