இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை pt

கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் | தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

புரட்டாசி மாதத்தில் வைணவத் திருத்தலங்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் சுற்றுப் பயணத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
Published on

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, புரட்டாசி மாதத்தில் வைணவத் திருத்தலங்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக சுற்றுலா பயணத்தை அறிவித்திருக்கிறது. அதன்படி, 60 வயது முதல் 70 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் இந்த ஆன்மீகப் பயணத்தில் கலந்துகொள்ளலாம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

வைணவக் கோவில்
வைணவக் கோவில் எக்ஸ்

2025-2026 ஆம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், சென்ற ஆண்டு புரட்டாசி மாதத்தில் பிரசித்திப் பெற்ற வைணவத் திருத்தலங்களுக்கு 60 வது முதல் 70 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் 1000 பேர் கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்பட்டனர். இந்த ஆண்டு 2,000 பக்தர்கள் வைணவத் திருத்தலங்களுக்கு அழைத்து செல்லப்படுவர் என்றும் அதற்காக அரசு நிதி ரூ 50 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இந்து சமய அறநிலையத்துறை
15வது ஆண்டில் 'புதிய தலைமுறை'... உண்மை உடனுக்குடன்!

இதற்காக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா பயணத்திற்கு மூத்த குடிமக்கள் நான்கு கட்டங்களாக அதாவது, செப்டம்பர் 20 மற்றும் 27, அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இந்த கட்டணமில்லா ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் இந்து சமயத்தை சார்ந்தவராகவும், 60 முதல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் விண்ணபிப்பவர்களின் ஆண்டு வருமானம ரூ 2 லட்சத்திற்கு குறைவானதாகவும் இருக்க வேண்டும், எனவும் தெரிவித்திருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை
விஜய்க்கு பதிலடி கொடுத்தாரா கமல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. இதுதான் பின்னணியா?

மேலும், இதற்கான விண்ணப்பத்தை அந்ததந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பணங்களைப் பதிவிறக்கம் செய்தோ, விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, அந்த விண்ணப்பத்துடன் ஆதார் கார்டை நகலை இணைத்து செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் சம்பத்தப் பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்பிக்கலாம் எனவும் இந்து அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Attachment
PDF
temple tour
Preview

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com