Tirupati | திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
tirupatiFB

திருப்பதி கோயிலில் இனி ரீல்ஸ் எடுக்கக்கூடாது... காரணம் இதுதான்!

திருப்பதி கோயிலுக்குள் இனி ரீல்ஸ் எடுக்க கூடாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
Published on

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயில் வளாகத்திற்குள் சமூக ஊடக ரீல்ஸ்களை படமாக்குவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது கோயில் நிர்வாகம். சமீபத்தில் திருப்பதி கோயில் குறித்த வீடியோ ஒன்றை தனிநபர் ஒருவர் வெளியிட்டார் அதில் கோயில் குறித்த சில கிண்டல் மற்றும் குறும்புத்தனமான விஷயங்களிருந்தது.. இதனை கண்டிக்கும் விதமாக, இனி ரீல்ஸ்களுக்கு தடை என்ற உத்தரவை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் இது போன்ற ரீல்ஸால் கோயிலின் புனிதத் தன்மை அவமதிக்கப்படுகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பதி தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில், இதுபோன்ற செயல்கள் ஆன்மீக சூழலில் பொருத்தமற்றவை மட்டுமல்ல, வெங்கடேஸ்வரரை வணங்க கோயிலுக்கு வரும் மில்லியன் கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் ஆழமாக புண்படுத்தும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Tirupati | திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
திருப்பதி கோயிலில் அதிரடி.. வேற்றுமத ஊழியா்கள் 4 பேர் பணி இடைநீக்கம்..!

மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழிபாடு மற்றும் பக்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான இடம். அதனால், அனைத்து சமூக ஊடகவியல் பார்வையாளர்களும் அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை மதிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் எதிர்பார்க்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னையை எதிர்த்துப் போராடும் விதமாக, அத்தகைய உள்ளடக்கத்தை படமாக்குவதன் மூலமோ அல்லது பரப்புவதன் மூலமோ கோயில் உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் மீது குற்றவியல் வழக்குகள் மற்றும் பிற தேவையான சட்ட விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tirupati | திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
திருப்பதிக்கு போக பிளான் இருக்கா? அப்போ கண்டிப்பாக இதை தெரிஞ்சுக்கோங்க..!

மேலும், திருப்பதி கோயிலின் ஆன்மீக சூழலைப் பராமரிப்பதில் அனைத்து பக்தர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொருத்தமற்ற வீடியோவை உருவாக்கி அதை விளம்பரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் திருமலை தேவஸ்தானம் சமூக ஊடகவியளாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com