அயோத்தியில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய ‘குழந்தை ராமர்’ அங்கு வந்தது எப்படி தெரியுமா?

அயோத்தியில் பாபர் மசூதிக்குள் குழந்தை ராமர் சிலை வந்தது எப்படி? வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற நிகழ்வு குறித்து ஒரு பார்வை
அயோத்தியில் உள்ள ராமர் சிலை
அயோத்தியில் உள்ள ராமர் சிலைpt desk

1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சுதந்திரம் பெற்று இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது. அச்சமயத்தில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றுவிட பெரிய அளவில் இன மோதல்களும் போர்களும் அரங்கேறி கொண்டிருந்த சோகமான தருணம். தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 10 மாதங்கள் ஆகி இருந்த நிலையில், நீர் பூத்த நெருப்பாக இருந்த பாபர் மசூதி ராமஜென்ம பூமி பிரச்சனை மீண்டும் பற்றி எரிய தொடங்கியது.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்

1949 டிசம்பர் 20ஆம் தேதி வாக்கில் பாபர் மசூதி மசூதியை சுற்றி சுமார் 5000 இந்துக்கள் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அடுத்த சில நாட்களுக்குள் மசூதியின் மையப் பகுதியில் மரப்பலகை ஒன்று இருந்தது. அதில் சுமார் எட்டு அங்குள்ள உயரமே உள்ள குழந்தை இராமன் சிலை வீற்றிருந்தது. அபிராம தாஸ் என்பவர் அயோத்தியில் வீதிவீதியாக சென்று ராமர் சிலை மசூதிக்குள் இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அயோத்தியில் உள்ள ராமர் சிலை
ஏன் குழந்தை ராமர் பிரதிஷ்டை? இன்று பிரதிஷ்டை செய்யப்படுவது ஏன்? பிராண பிரதிஷ்டை என்றால் என்ன?

இதை அடுத்து ஏராளமான மக்கள் அங்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ராமர் தோன்றி விட்டதாக பக்தர்கள் குதூகளித்தனர். ஆனால் சிலை எப்படி வந்தது என்று அயோத்தியின் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. வழக்கில் முதல் தகவல் அறிக்கையின் படி, மசூதி வளாகத்தில் காவலர் பணியில் இருந்த அபிராம தாஸின் தலமையில் சுமார் ஐம்பது நபர்கள்தான் குழந்தை ராமர் சிலையை மசூதிக்குள் வைத்துள்ளனர்.

இதைக்குறிப்பிட்டு பாபர் மசூதியில் அத்துமீறல் நடந்ததாக இஸ்லாமியர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு இந்துக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பூஜைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு அரசியல் வெறியாட்டங்கள் நிகழ்ந்தபோதும், இந்த குழந்தை ராமர் சிலை தற்காலிக குடிலில் இருந்து வந்தது. இந்நிலையில்தான் தற்போது புதிய குழந்தை ராமர் சிலை கொண்ட கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கருவறைக்குள் 75 ஆண்டு பழமையான குழந்தை இராமர் சிலையும் வைக்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com