ஏன் குழந்தை ராமர் பிரதிஷ்டை? இன்று பிரதிஷ்டை செய்யப்படுவது ஏன்? பிராண பிரதிஷ்டை என்றால் என்ன?

ராமர் என்றதும், நெடுந்து வளர்ந்த ஒரு அழகிய ஆண்மகனாய் கையில் வில்லுடன் இருக்கும் காட்சிதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இன்று அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட இருப்பது, குட்டி ராமர். அதாவது குழந்தை ராமர். இது ஏன்? பார்ப்போம்...
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்Pt

அயோத்தியாவில் குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்வதற்கு காரணம்...!

ராமர் என்றதும், நெடுந்து வளர்ந்த ஒரு அழகிய ஆண்மகனாய் கையில் வில்லுடன் இருக்கும் ராமரின் காட்சிதான் நினைவுக்கு வரும். காரணம் ராமர் கோவில் அமையபெற்றிருக்கும் மதுராந்தகம், வடுவூர் பத்ராச்சலம், ராமேஸ்வரம் போன்ற ஆலயங்களில் ராமரை கோதண்டராமனாக, கேசவ பெருமாளாக, கல்யாணராமராக பட்டாபிராமராக இப்படிதான் தரிசித்திருப்போம்.

ராமர் கோவில்
ராமர் கோவில்PT

ஆனால் அயோத்தியா என்பதுதான் ராமர் பிறந்த ஊர். சரையு நதிக்கரைக்கு அருகில் இருக்கும் அரண்மனையில் ராமர் பிறந்ததாக புராதண கதைகளில் குறிப்பிட்டு உள்ளது. ஆகவே அயோத்தி என்றதும் பக்தர்களுக்கு நினைவுக்கு வருவது, ‘அங்கிருக்கும் அரண்மனையில்தான் ராமர் பிறந்திருப்பார். குழந்தையாக ராமர் தவழ்ந்திருப்பார்’ என்பதே. எப்படி கோகுலம் என்றதும் தவழும் கண்ணன் நினைவுக்கு வருவோரோஒ.. அப்படி ராம்ஜன்ம பூமி என்றதும் குழந்தை ராமர் நினைவுக்கு வருவதால், அங்கு குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்வதாக சொல்லப்படுகிறது.

பிராண பிரதிஷ்டை

பிரதிஷ்டை என்றால், நிறுவுதல் என்று பொருள்படும். பிராணன் என்றால் உயிர். அதாவது நிறுவிய சிலைக்கு உயிர் தருதல் என்று பொருள்படும். ஆகவே, குழந்தை ராமராக பிரதிஷ்டை செய்யப்படும் திருவுருவத்திற்கு உயிரூட்டப்படுவது பிராண பிரதிஷ்டை

அயோத்தியில் உள்ள ராமர் சிலை
அயோத்தியில் உள்ள ராமர் சிலைpt desk

இன்று பிராண பிரதிஷ்டை செய்ய நாள் குறிக்கப்பட்டது ஏன்?

ராமர் சூரியகுலத்தில் பிறந்தவர். சூரியனுக்கு இரண்டு கால பயணங்கள் உண்டு 1.தக்ஷணாயணம், 2. உத்தராயணம். இதில் உத்தராயணகாலம் சூரியனுக்கு உகந்த காலம். தை மாதம் உத்தராயணம் ஆரம்பிக்கப்படுவதால், இன்று அதற்கான நாளை ஆன்மீகவாதிகள் குறித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com