சித்திரை திருவிழா: கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகரை அழகர் மலைக்கு வழியனுப்பிய பக்தர்கள்!

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை தரிசிக்க குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோஷத்துடன் அவரை தரிசனம் செய்து, அழகர்மலைக்கு அவரை வழியனுப்பி வைத்தனர்.
chitrai festival
chitrai festival pt desk

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்கோவிலில் இருந்து தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து அழகர் மதுரைக்கு வரும் வழியில் புதூர் மூன்றுமாவடி, தல்லாகுளம் ஆகிய பகுதியில் அவரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்ச்சேவை நடந்தது.

Kallazhagar
Kallazhagarpt desk

அதைத் தொடர்ந்து கள்ளழகர் கடந்த 5ஆம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார். இதையடுத்து நேற்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர், அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். இதைத் தொடர்ந்து நேற்றிரவு முதல் காலை வரை அழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெற்றது.

இதனையடுத்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்துடன் கிளம்பிய கள்ளழகர், மதிச்சியம், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இதனையடுத்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், இரவு தல்லாகுளம் பகுதியில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து நடைபெற்ற திருமஞ்சனத்தைத் தொடர்ந்து கள்ளழகருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

alagar
alagar pt desk

இதையடுத்து கருப்பணசாமி கோவிலில் கள்ளழகர், பூப்பல்லக்கில் எழுந்தருளினர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அழகர்மலை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.

chitrai festival
மீனாட்சி திருக்கல்யாணத்துக்குப்பின் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com