Sabarimalaifile
ஆன்மீகம்
ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை - சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு
ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது.
திருவோண நட்சத்திர தினமான, வரும் 15ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று மாலை ஐந்து மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. ஓணம் பண்டிகை தினத்தன்று, சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
Onam festivalpt desk
ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் ஓணம் பண்டிகையையொட்டி விருந்தும் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து, மாதாந்திர பூஜைக்காக வருகிற 21ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் தரிசன முன்பதிவும் தொடங்கியுள்ளது.
நெல்லை: சிறுவர்கள் இடையே ஏற்பட்ட சண்டை... ஒரு சிறுவனை அடித்த இன்னொரு சிறுவனின் பெற்றோரால் அதிர்ச்சி!