சிகிச்சை
சிகிச்சைfile

நெல்லை: சிறுவர்கள் இடையே ஏற்பட்ட சண்டை... ஒரு சிறுவனை அடித்த இன்னொரு சிறுவனின் பெற்றோரால் அதிர்ச்சி!

நெல்லையில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 2 மாணவர்கள் இடையே பள்ளியில் நடந்த சிறிய மோதலை பெரிதாக்கி பெற்றோர். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு மாணவனை பெற்றோர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: மருதுபாண்டி

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்கைகட்பட்ட தருவை கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் இரு மாணவர்கள் இடையே சிறிய வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் இடையே மோதல்
மாணவர்கள் இடையே மோதல்

இந்நிலையில், காயம்பட்ட மாணவன் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த அம்மாணவனின் பெற்றோர், மற்றொரு மாணவனின் வீட்டிற்குச் சென்று சண்டையிட்டுள்ளனர். இதையடுத்து கிராமத்து கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த மாணவனை தாக்கியுள்ளனர். இதில், அந்த மாணவனின் கழுத்து மற்றும் கை பகுதியில் உள்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிகிச்சை
கேரளா: நிலச்சரிவில் குடும்பத்தினர் 9 பேரை இழந்த பெண்... துணையாய் நின்ற காதலனும் விபத்தில் மரணம்💔!

தகவல் அறிந்து அங்கு வந்த காயம் பட்ட மாணவனின் தாய், மாணவனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததோடு முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com