பக்தர்களின் சோர்வு நீங்க சபரிமலையில் "களரி Fight" - கண்டு ரசித்த ஐயப்ப பக்தர்கள்!
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காலம் துவங்கியுள்ளது. இதையடுத்து சபரிமலைக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பையில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரமுள்ள மலை மீது ஏறி சபரிமலை செல்கின்றனர்.
சபரிமலை சன்னிதானத்தின் பெரிய நடைப் பந்தலில் அவர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். அவர்களின் சோர்வை போக்கி உற்சாகப்படுத்தும் நோக்கில் பெரிய நடைப்பந்தல் ஆடிட்டோரியத்தில், கேரள பாரம்பரிய வீர கலையான "களரி ஃபைட்" அரங்கேற்றம் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம் பாப்பனம்கோடு மாதவமத் களரி சங்கத்தின் 11 பேர் கொண்ட குழுவினர், களரி வந்தனம், கெட்டு காலி ஃபைட், காலுயர்த்தி ஃபைட், உடவாள் ஃபைட் என பல்வேறு வீர கலைகளை, தற்காப்பு கலையில் வல்லவரான ஐயப்பனுக்கு "கனரி ஃபைட்"டை சமர்ப்பித்தனர். தரிசனத்திற்கு காத்திருந்த திரளான ஐயப்ப பக்தர்கள் அதை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.