விழாக்கோலம் பூண்ட தஞ்சை... கோலாகலமாக நடந்த சதய விழா கொண்டாட்டம்!

தஞ்சையில் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
சதய திருவிழா
சதய திருவிழா ட்விட்டர்

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளில், ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி இவ்வருடம் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா தமிழ் முறைப்படி அரசு சார்பில் இன்று நடத்தப்பட்டது.

சதய திருவிழா ஊர்வலம்
சதய திருவிழா ஊர்வலம்

இந்த விழாவையொட்டி தஞ்சை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேவார திருமுறை பாடலுடன் விழா தொடங்கப்பட்டது. ராஜ ராஜசோழனுக்கு இசை புகழஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சதய திருவிழா
கன்னியாகுமரி: பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளிய கல்லூரி மாணவிகள் - ஓட்டுனர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

இதனைதொடந்து இன்று அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ராஜராஜ சோழன் நிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் யானை மீது திருமுறை வீதி உலா நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஓதுவார்கள் தமிழில் திருமுறைகள் பாட, 4 முக்கிய ராஜ வீதிகளில் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.

மாலை அணிவித்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்
மாலை அணிவித்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் file image

அதனைத்தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 திவ்ய அபிஷேகங்களும் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 3 நபர்களுக்கு ராஜராஜ சோழன் விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com